search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு:உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவிகள்
    X

    தருமபுரி நகர் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு:உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவிகள்

    • பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.
    • மாணவிகளுக்கு தனியார் பள்ளியில் வழங்குவது போல் இன்று முதலே பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    தருமபுரி,

    தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று (12-ந் தேதி) என்றும், 1-ம் முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந் தேதி என்றும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    பள்ளிக்கு வருவதற்காக மாணவ, மாணவிகள் சீருடைகளுடன் உற்சாகமாக வந்தனர்.

    தருமபுரியில் திருப்பத்தூர் சாலையில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணி முதலே 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில கூடிய மாணவிகள் புதிய வகுப்புகளில் பயிலும் ஆர்வத்துடன் சீருடையுடன் வந்தனர். அப்போது அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து மாணவிகள் பிரார்த்தனை யில் ஈடுபட்டனர். அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 2 மாணவிகளுக்கு பரிசு அளித்து வாழ்த்தினர்.

    மேலும், பள்ளிக்கு மாணவிகளுக்கு தனியார் பள்ளியில் வழங்குவது போல் இன்று முதலே பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் இந்தாண்டு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 230 புதிய மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதேபோல் பிளஸ்-1 வகுப்பில் 540 புதிய மாணவிகள் சேர்ந்துள்ளனர். பள்ளியில் மொத்தம் 3364 மாணவிகள் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    Next Story
    ×