search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் நொறுக்குத்தீனி, எழுது பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது
    X

    சென்னையில் நொறுக்குத்தீனி, எழுது பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது

    • பள்ளிகளின் அருகில் தள்ளுவண்டிகளில் மிட்டாய்கள், பானிபூரி, விற்கப்படும் அதை சுற்றிலும் பள்ளி மாணவர்கள் கூட்டம் மொய்க்கும்.
    • எழுதுபொருட்களான நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில், கலர் கிரேயான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக இந்த வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்தது. பள்ளிகள் திறந்ததால் தினமும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்புவது, மாலையில் வீடு திரும்பியதும் ஏதாவது நொறுக்கு தீனி கொடுப்பது வழக்கம். இதற்காகவே வீடுகளில் தனி பட்ஜெட் இருக்கும்.

    கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இல்லாததால் இனிப்பு, கார வகை கடைகள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் விற்பனை கணிசமாக குறைந்து இருந்தது.

    இந்த மாதம் விற்பனை சூடு பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் இப்போது வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கம்பெனிகளில் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது.

    பள்ளிகளின் அருகில் தள்ளுவண்டிகளில் மிட்டாய்கள், பானிபூரி, விற்கப்படும் அதை சுற்றிலும் பள்ளி மாணவர்கள் கூட்டம் மொய்க்கும்.

    அந்த காட்சியும் 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் களை கட்டுகிறது.

    எழுதுபொருட்களான நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில், கலர் கிரேயான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×