search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பணசாமி கோவிலுக்கு சாலை அமைக்க பூமி பூஜை
    X

    கருப்பணசாமி கோவிலுக்கு சாலை அமைக்க பூமி பூஜை

    • தொண்டி அருகே கருப்பணசாமி கோவிலுக்கு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
    • இந்த கோவிலுக்கு செல்லும் தார்சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமாக பதினெட்டாம் படி கருப்பண சாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரைத்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    ஏராளமான பக்தர்கள் வழிபட வரும் இந்த கோவிலுக்கு செல்லும் தார்சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

    இதையடுத்து இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கருப்பணசாமி கோவில் வரை சுமார் 670 மீட்டருக்கு பஞ்சாயத்து 14-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.20 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது.

    அதற்கான பூமி பூஜை பஞ்சாயத்து தலைவி பாண்டிச் செல்வி ஆறுமுகம், யூனியன் கவுன்சிலர் சுமதி முத்துராக்கு மற்றும் கிழக்கு தெரு, மேற்குத்தெரு ஜமாத்தலைவர்கள் உட்பட கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது.

    Next Story
    ×