search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது- சி.எம்.டி.ஏ.வுக்கு ராமதாஸ் வற்புறுத்தல்
    X

    அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது- சி.எம்.டி.ஏ.வுக்கு ராமதாஸ் வற்புறுத்தல்

    • சர்ச்சைக்குரிய நிலம் அடையாற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் இருப்பதை சி.எம்.டி.ஏ வெளியிட்ட வரைபடம் மூலம் அறிய முடிகிறது.
    • அடையாறு ஆற்றின் வெள்ள நீர் கொள்ளும் திறன் குறித்து வல்லுனர் குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண் 170-ஐ கொண்ட 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான கூட்டம் இந்த வாரத்தில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட நிலம் ஆற்றுப்பகுதியாகவே குறிப்பிடப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

    சர்ச்சைக்குரிய நிலம் அடையாற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் இருப்பதை சி.எம்.டி.ஏ வெளியிட்ட வரைபடம் மூலம் அறிய முடிகிறது.

    அடையாற்றின் நீரோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படும் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளையோ, தொழிற்சாலைகளையோ கட்ட அனுமதித்தால் எதிர்காலத்தில் சென்னைக்கு மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதை சென்னை தாங்காது.

    இந்த விஷயத்தில் சி.எம்.டி.ஏ எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது. அடையாறு ஆற்றின் வெள்ள நீர் கொள்ளும் திறன் குறித்து வல்லுனர் குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×