search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் திருட்டை பிடிக்க சென்றபோது அதிகாரிகளை கண்டதும் லாரியுடன் தப்பிஓடிய கும்பல்
    X

    அணைப்பட்டி அருகே பட்டப்பகலில் சவுடுமண் அள்ளும் காட்சி.

    மணல் திருட்டை பிடிக்க சென்றபோது அதிகாரிகளை கண்டதும் லாரியுடன் தப்பிஓடிய கும்பல்

    • சாலையை துண்டித்து மணல் மற்றும் சவுடு மண்ணையும் மர்ம நபர்கள் கடந்த சில நாட்களாக இரவு பகலாக அள்ளி வருகின்றனர்.
    • போலீஸ் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் மேற்குப் பகுதியில் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு மயானத்திற்கு செல்வதற்கும் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்வதற்கும் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலையை துண்டித்து மணல் மற்றும் சவுடு மண்ணையும் மர்ம நபர்கள் கடந்த சில நாட்களாக இரவு பகலாக அள்ளி வருகின்றனர்.

    இது குறித்து வருவாய்த்துறையினருக்கு புகார் வரவே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.அப்போது ஒரு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் லாரிகளில் பட்டப்பகலிலேயே மண்ணை அள்ளிக் கொண்டிருந்தனர்.

    அதிகாரிகள் வருவதைக் கண்டதும் ஜே.சி.பி.டிரைவர் மற்றும் லாரி டிரைவர் வாகனத்தை மிக விரைவாக எடுத்து அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடினர். இதைப்பார்த்த சித்தர்கள் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஷோபனா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட அனைவரும் லாரியை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் மணல் மற்றும் சவுடு மண் வண்டியை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சித்தர்கள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சோபனா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இப்பகுதி கிராம மக்கள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    Next Story
    ×