search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில்  விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி
    X

    இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி

    • பயிற்சி மையம் மிக சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றது.
    • இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தின் உதவி இயக்குநர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    இந்திய அரசாங்கத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி மையம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் மிக சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றது.

    புதிய அறிவிப்பு

    இந்த நிலையில் 2022-2023 -ம் ஆண்டுக்கான கூடைப்பந்து, தேக்வோண்டா ஆகிய பயிற்சியில் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் (ஆண்கள் மட்டும்) சேர்த்துக்கொள்வதற்கான அறிவிப்பு இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு வருகிற 18-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு நடைபெறும் நாட்கள் வருகிற 20 மற்றும் 21-ந்தேதி ஆகும்.

    தகுதி

    தனிநபர் விளையாட்டில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் 8 இடங்களை பெற்றவர்கள், மாவட்ட அளவிலான சாம்பி யன்ஷிப் போட்டி–களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விண்ணப்பிகலாம்.

    அணை விளையாட்டு பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளில் (2020-2021, 2021-2022) நடைபெற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் விளையாட்டு அணிகளில் தேசிய அளவில் முதல் 4 இடங்களை பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற–வர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டு சான்றிதழ் நகல், பிறந்த தேதி சான்றிதழ் நகல், மருத்துவ சான்றிதழ் அசல், ரேசன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் புகைப்ப டங்கள்-4, சாதி சான்றி தழ் நகல் ஆகிய 7 சான்றிதழ்கள் இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பத்துடன் சான்றி–தழ்களின் நகல்களை மட்டும் இணைத்து சான்றோப்பம் அளிக்க தகுதியுடைய அரசு அதிகாரியின் கையோப்பம் பெற்று அனுப்ப ப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.

    கல்வி கட்டணம் வழங்கப்படும்

    வயதிற்கேற்ற உயரம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதாவது விண்ணப்பிக்க வயது வரம்பு 1.1.2004-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 13 வயது 172 செ.மீ, 14 வயது 174 செ.மீ, 15 வயது 181 செ.மீ, 16 வயது 186 செ.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இந்திய அரசு சார்பில் தங்கும் வசதி, உணவு நாள் ஒன்றுக்கு ரூ.275 வீதம், மருத்துவ காப்பீட்டு வசதி ரூ.1000, விளையாட்டுக்களில் கலந்து கொள்ள பயணப்படி ரூ.3000, விளையாட்டு சீருடை ரூ.5000, கல்வி கட்டணம் ரூ.2000 வீதம் ஆண்டுேதாறும் வழங்கப்படும் என இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தின் உதவி இயக்குநர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×