search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாலை அருகே   வனக்காப்பாளரை தாக்கி காயப்படுத்திய மர்ம நபர்கள் யார்?  -போலீசார் தீவிர விசாரணை
    X

    பெரும்பாலை அருகே வனக்காப்பாளரை தாக்கி காயப்படுத்திய மர்ம நபர்கள் யார்? -போலீசார் தீவிர விசாரணை

    • பெரும்பாலை அருகே வனக்காப்பாளர் தாக்கப்பட்டுள்ளார்.
    • அவரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

    பெரும்பாலை.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை வன உட்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அதிகமாக வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    மயில், மான், காட்டுக்கோழி, காட்டுப்பன்றி, முயல், உடும்பு என பல காட்டு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகளை சில மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர்.

    அவ்வாறு வேட்டையாடும் நபர்களை வனத்துறையினர் பிடித்து பல வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பெரும்பாலை வன உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஏரியூர் அடுத்து ஏர்கொல்பட்டி சித்திரபட்டி வனப்பகுதியில் வன பாதுகாவலர்கள் சரவணன், ராமசுந்தரம் ஆகிய இருவர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஏற்கனவே நாட்டு துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்ட ஏர்கோல்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் மகன் சதீஷ் (28) என்பவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று காலை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சேர்ந்து வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறையினரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சதீஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கியை வன அலுவலரிடம் இருந்து பெற்றுத் தரும்படி மிரட்டியும் சதீஷ் மற்றும் 5 பேர் வன காவலர் சரவணனை சரமாரியாக மரக்கட்டை யால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் உடனிருந்த வனப்பாதுகாவலர் சரவணனை மீட்டு வன அலுவலர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

    தகவலறிந்து உடனடியாக வந்த வனத்துறையினர். சரவணனை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து ஏரியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×