என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக் கிணங்க மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க கோரி மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று தமிழக ஆட்சியா ளர்களுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும் வகையில் திரளாக பங்கேற்க வேண்டுமாறு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • இந்த முகாமை மாணிக்கம்தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்

    திருப்பரங்குன்றம்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கினார்.

    தொடர்ந்து நடந்த ரத்த தான முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.பழனிகுமார், ராஜ்குமார் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பகுதி தலைவர் நாகேசு வரன், வட்டார தலைவர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் முத்து வேல், சவுந்தர பாண்டி, வித்யாபதி, சத்யன், சரவணபவன், தங்க ராஜா, பழனிகுமார், மலைராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஜெயாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம டையாததால் மனவிரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இருப்பினும் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை எரித்தது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார். அதன்பேரில் முத்துமாரியின் கணவர் வேல்முருகன், அவரது தந்தை பாண்டி, உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தப்பி ஓடினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சோளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அதில் 3 ேபர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டனர். அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது மொத்தம் 131 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இந்தநிலையில் வேனில் வந்த 2 பேர் தப்பியோடினர். ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார்.

    அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் திருச்சுழி அருகே உள்ள கட்டத்தான்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(29) என்பதும், தப்பியோடியவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆவினிப் பட்டியை சேர்ந்த கோவிந்த ராஜ், சானார்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி என்பது தெரியவந்தது. புகையிலை பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்த வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 ேபரை தேடிவருகின்றனர்.

    • வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • முகாமில் பங்கேற்பவர்கள் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை

    மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் நிதி உங்கள் அருகில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.

    வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்புநிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    அதன்படி முகாம்கள் மதுரை மாவட்டத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், தேனி மாவட்டத்தில் சின்ன மனூர் நகராட்சி கூட்ட அரங்கத்திலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பேயன்பட்டியில் உள்ள செல்லப்பன் வித்யா மந்திரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, ஆத்துப்பட்டி பிரிவில் உள்ள ஜெயின் குரூப் ஆப் இன்ஸ்டி டியூஷன்சிலும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார்.
    • மாவட்ட கலெக்டர் தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என கூறினார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    60 சதவீதம் மாற்றுத்திறனாளியான நான், கடந்த டிசம்பர் மாதம் முத்தையாபுரம் ஊராட்சி எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டு கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

    இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்ட பணியானது இட ஒதுக்கீடு அடிப்படையில் தவறாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி என்னை பணியிலிருந்து நீக்குவதாக கலெக்டர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எனவே எனக்கு அனுப்பிய மாவட்ட கலெக்டரின் நோட்டீசுக்கு தடை விதித்து, நான் தொடர்ந்து கிராம உதவியாளராக பணியாற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மாரீஸ் குமார் ஆஜராகினார். அவர் மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக மாவட்ட கலெக்டர் தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என கூறினார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, மாவட்ட கலெக்டரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உரிய பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தற்கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க. நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பதாக கூறிவரும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவர்னரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கவர்னரை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு இடையூறாக உள்ள கவர்னரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. நிர்வாகி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர் நலச்சங்க தலைவரும், தி.மு.க. தொழிற்சங்க தலைவராகவும் இருப்பவர் மானகிரி கணேசன். இவர் பெயரில் கவர்னரை மாற்றவேண்டும் என நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பாராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகள் கடைகோடி மக்கள் வரை சேர வேண்டும் என விரும்பி செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். அவரை வருகிற 27-ந் தேதிக்குள் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றாவிட்டால் 28-ந்தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலையின் முன்பு தீக்குளித்து சாவேன்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க. நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கவுன்சிலர் நாகநாதன் வாக்குறுதி அளித்தார்.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 67-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து குடியி ருப்போர் நல சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் சரியில்லாமல் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. பாதாள சாக்கடை வசதி இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சரியான முறையில் இல்லை. குடிநீர் தினசரி வழங்க வேண்டும். பொது சுகாதாரம் சரி இல்லை என வார்டு கவுன்சிலர் நாகநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மனுவை பெற்றுக் கொண்ட நாகநாதன் இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் படும். அதற்கான முன் முயற்சிகளை செய்து வருகிறேன். பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து எடுத்து கூறி இருக்கிறேன்.

    மேலும் மீண்டும் உங்கள் கோரிக்கை மனுவை காண்பித்து உடனடியாக உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற செய்வேன் என்று உறுதி கூறினார்.

    இதில் மாநகராட்சி மத்திய மண்டல உதவி வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் ரகுநாதன், பில் கலெக்டர் அருண்குமார், தொழில் நுட்ப உதவி யாளர்கள் வடிவேல், அருணாசலம், மணிகண்டன், தீபன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர் கைதானார்.
    • போலீசார் பரோடா சுதிரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிரபல 5ஸ்டார் ஓட்டல் உள்ளது. சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு 30 வயதுடைய நபர் டிப்டாப் உடையணிந்து வந்தார். அவர் தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்தி கொண்டதோடு தனக்கு ஆடம்பரமான அறை வாடகைக்கு வேணடும் என கூறியுள்ளார்.

    அதன்படி ஓட்டல் நிர்வாகம் அனைத்து வசதிகளுடன் கூடிய அறையை அந்த நபருக்கு ஒதுக்கியது. கடந்த சில நாட்கள் ஓட்டலில் தங்கிய அந்த வாலிபர் உணவு, மது என ஏக போக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். ஓட்டல் அறையை விட்டு வெளியேறும் போது பில் தொகையை செலுத்துவதாகவும் ஓட்டல் நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த நபர் சம்பவத்தன்று இரவு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த தப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது நுழைய வாயிலில் இருந்த ஓட்டல் காவலாளி கையும் களவுமாக பிடித்தார். அவரிடம் ஓட்டலில் தங்கியதற்கான பணத்தை கேட்டபோது இல்லை என கூறியதோடு மோசடி பேர்வழி என தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த பரோடா சுதிர் என தெரியவந்தது. இவர் வேலைக்கு செல்லாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பியுள்ளார்.

    இதற்காக ரெயில்களில் பயணம் செய்யும் இவர் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி, 3 ஸ்டார், 5 ஸ்டார் ஓட்டல்களில் தங்கி ஏக போக வசதியை அனுபவித்து அதற்கான தொகை செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பரோடா சுதிரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வாலிபர்-முதியவர் மீது தாக்குதல் நடத்திய இளம்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தொகையை முதியவர் கந்தசாமி திருப்பி செலுத்தவில்லை.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சித்திரவேல்(வயது29). ஆரப்பாளையம் கோமஸ்பாளையத்தை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் கவியரசன்.

    இவர்க ளுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மேல பொன்னகரம் கார்ப்ப ரேஷன் காலனி சந்திப்பு 2-வது தெரு அருகே சித்திரவேல் சென்று கொண்டிருந்தார்.

    அவரை கவியரசன், சிந்தனைச்செல்வன், சின்ன கருப்பன் ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக பேசி மரக்கட்டையால் தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து சித்ரவேல் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிந்தனை செல்வன் மற்றும் சின்னக்கருப்பனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிந்தனை செல்வன் கொடுத்த மற்றொரு புகாரில், சித்திரவேல், காளிதாஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். சித்திரவேலை கைது செய்தனர்.

    இளம்பெண்

    மதுரை கே.புதூர் அழகர்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது75). கே.புதூர் சர்வேயர் காலனி ஆவின் நகர் 2-வது தெருவை சேர்ந்த செல்வகணேசனின் மனைவி லாவண்யா (28). இவரது பெற்றோர் கந்தசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். பின்னர் வாடகை வீட்டை காலி செய்து விட்டனர். இவர்கள் ரூ1500-யை மின்சார கட்டண அட்வான் சாக கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த தொகையை முதியவர் கந்தசாமி திருப்பி செலுத்தவில்லை. அதை கேட்க சென்ற லாவண்யா அவரை ஆபாசமாக பேசி யுள்ளார். அவரை பிளாஸ் டிக் வாளியால் தாக்கி யுள்ளார். இது குறித்து முதியவர் கந்தசாமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கந்த சாமியை தாக்கிய லாவண் யாவை கைது செய்தனர்.

    • பாண்டிகோவில் ரிங் ரோட்டில் பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி அய்யணன் நகர் ஸ்ரீராமன்(வயது27), வாடிப்பட்டி கச்சைகட்டி பசும்பொன் நகர் ரமேஷ்(35), சுரேந்தர்(36) ஆகிய 3பேைர போலீசார் கைது செய்தனர். 

    • கீரைத்துறையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.6,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை கீரைத்துரையில் ராஜம்மான் நகர் கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கீரைத்துைற போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்று கண்காணித்தார்.

    அப்போது அங்கு புது ராம்நாடு ரோடு மாரி (வயது40), மேல அனுப்பானடி இளையராஜா(38), ராஜா(41), அனுப்பானடி சேகர்(41), முருகவேல்(55), ஆறுமுகம்(41) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×