search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man attack"

    • மதுரையில் வாலிபர்-முதியவர் மீது தாக்குதல் நடத்திய இளம்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தொகையை முதியவர் கந்தசாமி திருப்பி செலுத்தவில்லை.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சித்திரவேல்(வயது29). ஆரப்பாளையம் கோமஸ்பாளையத்தை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் கவியரசன்.

    இவர்க ளுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மேல பொன்னகரம் கார்ப்ப ரேஷன் காலனி சந்திப்பு 2-வது தெரு அருகே சித்திரவேல் சென்று கொண்டிருந்தார்.

    அவரை கவியரசன், சிந்தனைச்செல்வன், சின்ன கருப்பன் ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக பேசி மரக்கட்டையால் தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து சித்ரவேல் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிந்தனை செல்வன் மற்றும் சின்னக்கருப்பனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிந்தனை செல்வன் கொடுத்த மற்றொரு புகாரில், சித்திரவேல், காளிதாஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். சித்திரவேலை கைது செய்தனர்.

    இளம்பெண்

    மதுரை கே.புதூர் அழகர்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது75). கே.புதூர் சர்வேயர் காலனி ஆவின் நகர் 2-வது தெருவை சேர்ந்த செல்வகணேசனின் மனைவி லாவண்யா (28). இவரது பெற்றோர் கந்தசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். பின்னர் வாடகை வீட்டை காலி செய்து விட்டனர். இவர்கள் ரூ1500-யை மின்சார கட்டண அட்வான் சாக கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த தொகையை முதியவர் கந்தசாமி திருப்பி செலுத்தவில்லை. அதை கேட்க சென்ற லாவண்யா அவரை ஆபாசமாக பேசி யுள்ளார். அவரை பிளாஸ் டிக் வாளியால் தாக்கி யுள்ளார். இது குறித்து முதியவர் கந்தசாமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கந்த சாமியை தாக்கிய லாவண் யாவை கைது செய்தனர்.

    • மதுரை அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்குவெளி வீதி பழைய மகாளிப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது72). இவருக்கும், தெற்குமாசி வீதி ஜடாமுனி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபாலன் (47) என்பவருக்கும் தங்களது மூதாதையர் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜகோபாலன் 4 பேருடன் சென்று லட்சுமணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து லட்சுமணன் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலன், ரங்கன் ஆசாரி தெரு ரமேஷ், அவரது மனைவி ராதிகா (43),பொதும்புவை சேர்ந்த மகேந்திரன் (63) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இல்லாத மாத்திரையை எதற்கு எழுதி கொடுத்தீர்கள் என்று டாக்டரை தாக்க முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உம்பாரக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    இதற்காக இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று வந்தார். அப்போது புறநோயாளிகள் சிகிச்சை அறையில் டாக்டரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றார். திடீரென்று அவருக்கு வயிற்று வலி அதிகமாகவே நேராக டாக்டரை சந்தித்து முதலில் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டார். 

    உடனே அவருக்கு டாக்டர் மருந்து சீட்டில் மருந்து எழுதி கொடுத்து இதனை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே கோவிந்தன் மருந்தகம் அறைக்கு சென்று சீட்டை காண்பித்து மாத்திரை கேட்டார். அப்போது டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை இல்லை என்று அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். 

    உடனே அவர் டாக்டரிடம் சென்று இல்லாத மாத்திரையை எதற்கு எழுதி கொடுத்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் டாக்டரை கோவிந்தன் அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து டாக்டர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தனை கைது செய்தனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×