தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு

தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஜெயாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம டையாததால் மனவிரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இருப்பினும் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை எரித்தது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார். அதன்பேரில் முத்துமாரியின் கணவர் வேல்முருகன், அவரது தந்தை பாண்டி, உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com