என் மலர்tooltip icon

    மதுரை

    • மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஓய்வூதியர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
    • அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருவூல கமிஷனர் மற்றும் ஓய்வூதியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 149 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    இதில் அதிகமானோர் சரியான முறையில் ஓய்வூதிய பணம் வந்து சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், மேலும் குடும்ப அட்டை மருத்துவ செலவுகளுக்கான பண பலன்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இவர்களின் குறைகளைக் கேட்ட கலெக்டர் அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

    • காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
    • அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    சென்னையில் கொட்டி தீர்த்த மழையில் ஒரே நாளில் தலைநகர் சென்னை தத்தளிக்கிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில், அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 160 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

    மேலும் வரும் 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கடலூர், கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்ற ஒரு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது.

    கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜூன் மாதத்தில் சென்னையிலே அதிக பட்சமாக மழைபதிவாகி இருப்பதால், 2 நாட்களாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டி ருக்கிறது.

    சென்னை புறநகர் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். சில இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதே போன்று நங்கநல்லூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

    வேப்பேரி, பெரம்பூர், கோயம்பேடு, திருமங்கலம், கத்திபாரா மேம்பாலம், கணேசபுரம் சுரங்க பாதை என பல்வேறு முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமி ழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 4 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பருவ மழைகாலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடன டியாக சீர்படுத்துவதற்கும், பொறுப்பு அதிகாரிகளாக அனுபவம் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, கள ஆய்வுகளை நடத்தி நடவ டிக்கைகளை மேற்கொள் வார்கள்.

    தற்போது தி.மு.க. ஆட்சியில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், தென்மேற்கு பருவ மழை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது போன்ற காலங்களில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.

    ரூ.12 கோடியில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு திருவாரூரில் முகாமிட்டுள்ள முதல்-அமைச்சர், மக்களுக்கு கடமைகளை செய்ய வேண்டாமா? அப்படி நீங்கள் மக்களுக்கு பணி செய்தால் உங்களை வரவேற்பார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் மாணவ-மாணவிகள் வந்தனர்.
    • ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை மாணவ-மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுைர மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சி சங்கரலிங்காபுரத்தில் உள்ள பழமையான சங்கராலிங்கபுரம் அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு தற்போது அரசு ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை மாற்றவும் கூடாது, பழைய பெயரிலேயே செயல்பட வேண்டும். அதேபோல இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் ேமாசமான நிலையில் உள்ளது.

    அதனை சரிசெய்து தரும்படியும் மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெற்றோர்களுடன் மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலை-கடன் வாங்கித்தருவதாக நூதனமாக பேசி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடியை சேர்ந்தவர் உதயபாண்டி. இவரது மனைவி காயத்ரி(வயது29). சம்பவத்தன்று செல்போன் மூலம் இவரிடம் பேசிய மர்ம நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

    இதை நம்பிய காயத்ரி சம்பவத்தன்று மாட்டுத் தாவணி அருகே சரவணன் என்பவரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த காயத்ரி செல்போ னில் பேசிய நபருடன் பேச முயன்றார். ஆனால் பலனில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காயத்ரி புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள அரசூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் கூறியுள்ளார். இதற்காக ராமசாமி அவருக்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றபின் வேலை வாங்கித்தரவில்லை.

    இதையடுத்து ராமசாமி பணத்தை திரும்ப தருமாறு கேட்டபோது, ரூ.2½ லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தை தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜா மற்றும் உடந்தையாக இருந்த வெங்கடேசன் என்பவர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வடபழஞ்சி பகுதியில் புதிய உயர்மட்ட ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்களிடம் அதிகாரி உறுதியளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை-போடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தபோது வடபழஞ்சி-நாகமலை புதூர் பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால் மழை காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் தண்ணீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ரெயில்வே சுரங்கப் பாதையை மூடிவிட்டு உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில்வே துறையிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வடபழஞ்சிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் அருகே ரெயில்வே துறை ஒப்புதல் பெற்று புதிய உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்ககப்படும் என பொதுமக்களிடம் வருவாய் அலுவலர் உறுதி யளித்தார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சர்மிளா, மதுரை மேற்கு தாசில்தார் நாகராஜன், மண்டல துணை வட்டாட்சியர் வீரக்குமார், சர்வேயர் பழனி, வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி மற்றும் ரெயில்வே கோட்ட பொறியாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • மதுரையை சேர்்ந்த மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதல்-அமைச்சர் பதக்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் 1970-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் 45 பரிசுகளில் மூன்றில் ஒரு பங்கு பரிசை இந்தியன் சிலம்பப்பள்ளி மாணவ-மாணவிகள் வென்றனர். இவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். கல்லூரி மாணவர் விஜய ராஜன் சுருள்வாள், ஒற்றைக் கம்பு விளையாட்டில் தங்கமும் வெள்ளி பதக்க மும், ஜெயக்குமார் அலங்காரவீச்சில் தங்கப்பதக்கம் வென்றார்.

    அஜீதா இரட்டைக் கம்பு விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். பள்ளிகள் அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் பாலமுருகன் வெள்ளி பதக்கத்தையும், ஜாலினி வெள்ளிப்பதக்கமும், பொது பிரிவில் மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார். இவர்களில் நான்கு பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளை தலைமை பயிற்சியாளர் மாமல்லன் எஸ்.எம்.மணி, பயிற்சியாளர் வடிவேல், சந்திரா, ஒருங்கி ணைப்பாளர் நிஜாமுதீன், பயிற்சியாளர்கள் கராத்தே கண்ணன், கனிராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி னர்.

    • மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடைபெற்றது.

    மதுரை

    மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் தலைவராக ஆனந்தகுமார், செயலா ளராக சுலைமான், பொருளா ராக வைகுந்தசிங் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

    கூட்டத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மாவட்ட அளவில் மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகளை நடத்துவது, மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இந்த நிகழ்ச்சியை செந்தமிழ் அரசு தொகுத்து வழங்கினார். முடிவில் சந்துரு நன்றி கூறினார்.

    • மதுப்பழக்கத்தால் நாளடைவில் உடல் தளர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது.
    • மகள் முன்பு மது குடித்த அந்த ஆசாமி நாளடைவில் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது.

    மதுரை:

    'மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்ற விழிப்புணர்வு வாசகம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அதனை பார்த்துக் கொண்டே நாள்தோறும் ஏராளமான கடந்து செல்கின்றனர். மதுவினால் நாடும்... வீடும்... எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் ஓடுகிறோம்.

    இன்றைய நவீன காலத்தில் மது குடிப்பது பகட்டான விஷயமாகவே கருதப்படுகிறது. அதிலும் இன்று இருபாலரும் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக பெரிய பெரிய நகரங்களில் பெண்களும் மது கடைகளில் நிற்பதை காண முடிகிறது. மதுப்பழக்கத்தால் நாளடைவில் உடல் தளர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது. மது குடிக்கும் நபர் மட்டும் இதில் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவரை சார்ந்த நபர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    மதுவினால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி இயல்பாக இருக்க முடியாமல் கடந்த சில மாதங்களாக ஒரு வித மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான்.

    சிறுமியின் தந்தை கூலி தொழிலாளி. வேலை முடித்து வரும் அவர் தினமும் போதையிலையோ அல்லது மது பாட்டிலோடு தான் வீட்டுக்கு வருவது வழக்கம். மகள் முன்பு மது குடித்த அந்த ஆசாமி நாளடைவில் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது. அவரும் மது குடிக்க பழகிக் கொண்டார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் வீட்டுக்குள்ளேயே ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் சிறிதும் கூட யோசிக்கவில்லை.

    மது குடித்துவிட்டு போதை ஏறிய பின்பு கணவன், மனைவி தங்கள் 9 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பல நேரங்களில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுள்ளனர். இதனால் அந்த சிறுமி பக்கத்து வீட்டிலோ அல்லது தெருவிலோ தூங்கும் நிலை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவும் போதையில் பெற்றோர் தங்களது மகளை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.

    பெற்றோரின் பொறுப்பு கெட்ட இந்த செயலால் செய்வதறியாது திகைத்த அந்த சிறுமி இறுதியாக அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

    சிறுமியின் நிலையைப் பார்த்து போலீசாரும் பரிதாபப்பட்டனர். இந்த நிலையில் இந்த தகவல் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு தெரியவந்தது. அவர் உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட சிறுமிக்கு வேண்டியவற்றை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் சோபனா, டயானா ஆகியோர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அந்த சிறுமியை மீட்டனர். பெற்றோரின் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கலெக்டர் சங்கீதா போன் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.

    • பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டம், மேலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேலூர் கீழையூரில் நடந்தது.

    தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன், வெள்ளைச்சாமி, வர்த்தக அணி தலைவர் தர்மலிங்கம், ஆன்மீக பிரிவு தலைவர் தங்கையா, விவசாய அணி செயலாளர் குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் பூமிராஜன், விவசாய அணி தலைவர் பிரகாஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபு மற்றும் மணி, புவனேஸ்வரன், சிவா, சிவகுமார், அருண், பாலமுருகன், செல்வராஜ், தங்கையா, சீனிவாசபெருமாள், பூபதி, சிவதானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை 

    மதுரை அஞ்சல் கோட்ட நடுநிலை கண்காணிப்பாளர் ஜவகர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் 1-க்கு ரூ.5,926-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது. தனி நபர் நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கத்திற்கு முதலீடு செய்யலாம். இந்த தங்கமானது பத்திர வடிவில் இருந்தால் அது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி ஆண்டு ஒன்றுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கூடுதலாக கிடைக்கும். எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் எம்.எம்.சி. காலனி காவேரி நகர் 6-வது தெருவில் சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. விழா தொடங்கிய 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    ×