என் மலர்
மதுரை
- மதுரையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது.
மதுரை
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகிய வற்றை கண்டித்தும், அமலாக்கத்து றையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று பேசினர்.
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில் ''தமிழ கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றி கரமாக நடைபெறு கிறது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்.
அ.தி.மு.க. இன்னும் ஒராண்டில் ஆட்சிக்கு வர போகிறது. தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர் என்றார்''.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து செந்தில் பாலாஜி சென்றார் எனும் தகுதியை இழந்து விட்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் ரூ.7,200 கோடியை ஊழல் செய்து உள்ளார். செந்தில் பாலாஜி, ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?, சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார், அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதி.மு.க.வினர் உறங்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?, கருணாநிதி காலம் தொட்டு தி.மு.க. பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது, கருணாநிதி காலத்தில் நம்முடைய ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தார், தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது,
புதுவிதமாக கஞ்சா மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசமாக மாட்டி கொண்டார். செந்தில் பாலாஜி தன்னை பாதுகாத்து கொள்ள நெஞ்சுவலி என சொல்ல வில்லை.பைபாஸ் சர்ஜரிக்கு 3 நாள் ஓய்வு போதும். ஆனால் இவர்கள் 3 மாதம் ஓய்வு கேட்பதை பார்த்தால் சந்தேகமாக தான் இருக்கிறது.
இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
அதி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அதி.மு.க.விற்கு புகழை சேர்க்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரெயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்
- ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.
மதுரை
மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை- போடி ரெயில் பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது. பணியின் போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட்களை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே மூடியது.
இதை தொடர்ந்து மதுரை- போடி ரெயில்வே பாதைக்கு அருகே இருந்த பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடக்க வழி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரெயில்வே கிராசிங்கை கடக்கும் சூழல் உருவானது.
சில இடங்களில் ரெயில்வே நிர்வாகத்தால் 500மீட்டர் தூரம் வரை மட்டுமே சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் பொதுமக்கள் பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.
மேலும் புளியங்குளம் ஒத்தவீடு- கிண்ணிமங்கலம், மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, மணப்பட்டி, வெள்ளப்பாரைபட்டி, சின்னசாக்கிலிபட்டி, அய்யனார்குளம், மீனாட்சி காலனி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கீழப்புதூர் க.புதூர் முத்துப்பட்டி, நாகமலைபுதூர், அடைக்கம்பட்டி, ஓந்திமலை, டீச்சர்ஸ் காலனி போன்ற 18 கிராம மக்கள் மதுரை- போடி ரெயில்வே லைனை கடந்து, மதுரை - தேனி மெயின் ரோட்டுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.
இது குறித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் மதுரை - போடி ரெயில்வே லைனில் உள்ள சர்வீஸ் ரோடுகளை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணி வரை தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.
- மதுரை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
- விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மதுரை
மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பா ளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இளைய தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தொகுதி, பகுதி வாரியாகவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நாளை (22-ந்தேதி) காலை 11மணிக்கு உசிலம் பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட் டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா, நலத்திட்ட விழா நடைபெறு கின்றன. தெற்கு மாவட்ட பொருளாளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் மதியம் 1 மணிக்கு அன்ன தான விழா நடை பெறுகின்றன.
மாவட்ட பிரதிநிதி கல்லணை குமார் ஏற்பாட்டில் விளாச்சேரி பகுதியில் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு விழா இனிப்பு வழங்கும் விழா நடக்கிறது.
மேற்கு பகுதியில் மாடக்குளம் ரோகித் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளை ஞரணி, தொண்டரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொழிற்சங்க அணி, வர்த்தக அணி, கொள்கைபரப்பு அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி விவசாய அணி நிர்வாகிகள் ஏற்பாட் டில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
- மதுரையில் ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம் நடந்தது.
- நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும், விடுதியில் உள்ள மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா தகுதியான பயனாளிகளுக்கு வழங்குதல் மற்றும் அரசு அலுவலர்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பும் விதமாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோட்டூர்சாமி, தாட்கோ மேலாளர் ராஜேஸ்வரி, வட்டாட்சியர் தனலெட்சுமி, துணை வட்டாட்சியர் வீரக்குமார், கண்காணிப்பாளர் சேவியர் பால்ச்சாமி,நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கே.அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் லூர்து, மாவட்டக்குழு உறுப்பினர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைேமயர் நாகராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், சமய உரையாடல் குழு செயலர் பெனடிக் பர்ணபாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அங்குள்ள மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
- சோழவந்தான் அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
- பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி வைகையாற்று கரையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவில் நேற்று கோவில் பூசாரி ராமசாமி தலைமையில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
இரவு 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் கமிட்டினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- சோழவந்தானில் தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
- பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.
சோழவந்தான்
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனையின்பேரில் சோழவந்தான் தி.மு.க. இளைஞரணி சார்பாக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, வாடிப் பட்டி ஒன்றிய செய லாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். சோழவந்தான் பேரூர் சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், சோழவந்தான் பேரூர் இளைஞரணி முட்டைகடை காளி வரவேற்றனர். தி.மு.க. பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.
இதில் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், செல்வராணி, ஜெய ராமச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் லதா, கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், நிஷா கவுதம ராஜா, குருசாமி, முத்து செல்வி சதீஷ், நகர அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மாணவரணி சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பால சுப்பிரமணியன், மேலக்கால் ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் ரவி, சங்கங்கோட்டை சந்திரன், தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே இன்று நடந்த விபத்தில் கார் மோதி பழ வியாபாரி பலியானார்.
- பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம் பட்டியை அடுத்துள்ள அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் புயல்ராஜ் என்ற ராஜீவ்காந்தி (வயது38). இவர் அங்குள்ள நான்கு வழிச்சாலையில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இன்று காலை ராஜீவ்காந்தி நான்கு வழிச்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக புயல்ராஜ் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கொட்டாம்பட்டி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புயல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை மேலூர் அருகே போலீசார் விரட்டி பிடித்தனர். காைர ஓட்டி வந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் ரெயில் மறியல் நடத்துவோம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
- முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றத் தில் முருகப்பெருமானின் முதற்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருப்ப ரங்குன்றத்தில் சாலை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் அமைக்கப்பட்ட போது இப்பகுதியில் மேம்பாலம் தேவையில்லை சுரங்கப்பாதை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை மீறி மேம்பாலம் கட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவில், காய்கறி சந்தை, திருநகரில் உள்ள பள்ளி களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவி கள் ெரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்று வந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும், ரயில்வே தண்டவாளம் மற்றும் மேம்பாலத்தை கடந்து வந்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பாதுகாப்பு கருதி ெரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை கடக்க முடியாத வகையில் தடுப்பு அமைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் அனைவரும் மேம்பாலத்தில் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும், முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதையடுத்து இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.இதனை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு,
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், வியாபாரி கள் சங்கத்தினர், பொது மக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் நலன்கருதி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி கடையடைப்பு போராட்டம், 19-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
- திருமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் நித்தியானந்தம் என்பவர் தனியார் டெக்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இந்த நிறுவனத்தில் எந்திரம் இயங்கி கொண்டிருந்த பொழுது திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து திருமங்கலம் தீயணைப்பு போலீசார் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து எந்திர மோட்டார்கள், மூலப்பொருட்கள், தறிகள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய் இறந்ததை 9 வயது சிறுமியால் தாங்கி கொள்ள முடியவில்லை.
- அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை வில்லாபுரத்தை அடுத்துள்ள பத்மா தியேட்டர் எதிரில் உள்ள 3 மாடி குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணாயிரம், தொழிலாளி. இவரது மனைவி பொண்ணு. இவர்களுக்கு 9 வயதில் இளவரசி என்ற மகள் இருந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த மாதம் பொண்ணு கணவர், குழந்தைகளை பிரிந்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொண்ணு சென்னையில் உறவினர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தாயாரின் இந்த முடிவு இளவரசிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக யாருடனும் பேசாமல் சோகத்துடன் காணப்பட்டார். தாய் இறந்ததை 9 வயது சிறுமியால் தாங்கி கொள்ள முடியவில்லை.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த இளவரசி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் இளவரசியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்தில் மகளும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சிைய ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிள், ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக நான்கு வழிச்சாலையை கடந்து சென்ற சந்துரு மீது மோதியது.
- வெங்கடசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது55). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்க நான்கு வழிச்சாலையை கடப்பதற்காக நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த முத்துபாண்டி(52), திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் வெங்கடசாமி(49) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். கட்டிட தொழிலாளிகளான இவர்கள் இருவரும், கரிசல்பட்டியில் வேலையை முடித்து கொண்டு தங்களது ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்களது மோட்டார் சைக்கிள், ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக நான்கு வழிச்சாலையை கடந்து சென்ற சந்துரு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்த முத்துப்பாண்டி, வெங்கடசாமி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர்.
அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே முத்துபாண்டி பரிதாபமாக இறந்தார். வெங்கடசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.






