search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மதுரையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். அருகில் தொழில்நுட்ப பிரிவு மண்டலப்பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் உள்பட பலர் உள்ளனர்.

    அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • மதுரையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகிய வற்றை கண்டித்தும், அமலாக்கத்து றையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில் ''தமிழ கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றி கரமாக நடைபெறு கிறது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்.

    அ.தி.மு.க. இன்னும் ஒராண்டில் ஆட்சிக்கு வர போகிறது. தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர் என்றார்''.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து செந்தில் பாலாஜி சென்றார் எனும் தகுதியை இழந்து விட்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் ரூ.7,200 கோடியை ஊழல் செய்து உள்ளார். செந்தில் பாலாஜி, ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?, சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார், அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதி.மு.க.வினர் உறங்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

    ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?, கருணாநிதி காலம் தொட்டு தி.மு.க. பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது, கருணாநிதி காலத்தில் நம்முடைய ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தார், தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது,

    புதுவிதமாக கஞ்சா மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசமாக மாட்டி கொண்டார். செந்தில் பாலாஜி தன்னை பாதுகாத்து கொள்ள நெஞ்சுவலி என சொல்ல வில்லை.பைபாஸ் சர்ஜரிக்கு 3 நாள் ஓய்வு போதும். ஆனால் இவர்கள் 3 மாதம் ஓய்வு கேட்பதை பார்த்தால் சந்தேகமாக தான் இருக்கிறது.

    இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

    அதி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அதி.மு.க.விற்கு புகழை சேர்க்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×