ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம்

மதுரையில் ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம் நடந்தது.நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம்
Published on

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும், விடுதியில் உள்ள மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா தகுதியான பயனாளிகளுக்கு வழங்குதல் மற்றும் அரசு அலுவலர்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பும் விதமாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோட்டூர்சாமி, தாட்கோ மேலாளர் ராஜேஸ்வரி, வட்டாட்சியர் தனலெட்சுமி, துணை வட்டாட்சியர் வீரக்குமார், கண்காணிப்பாளர் சேவியர் பால்ச்சாமி,நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com