தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்

சோழவந்தானில் தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.
தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
Published on

சோழவந்தான்

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனையின்பேரில் சோழவந்தான் தி.மு.க. இளைஞரணி சார்பாக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, வாடிப் பட்டி ஒன்றிய செய லாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். சோழவந்தான் பேரூர் சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், சோழவந்தான் பேரூர் இளைஞரணி முட்டைகடை காளி வரவேற்றனர். தி.மு.க. பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.

இதில் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், செல்வராணி, ஜெய ராமச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் லதா, கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், நிஷா கவுதம ராஜா, குருசாமி, முத்து செல்வி சதீஷ், நகர அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மாணவரணி சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பால சுப்பிரமணியன், மேலக்கால் ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் ரவி, சங்கங்கோட்டை சந்திரன், தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com