என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரசு பஸ் மோதி: சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை பலி
  X

  அரசு பஸ் மோதி: சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு பஸ் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை பரிதாபமாக இறந்தார்.
  • பஸ் டிரைவரை கைது செய்து செய்தனர்.

  ராஜபாளையம்

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). இவரது மகன் நந்தகோபால் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

  விடுமுறைக்கு ஊருக்கு வந்த நந்தகோபால் தந்தை வசிக்கும் வீட்டை கட்டிட தொழிலாளர்களை வைத்து பராமரிப்பு பணி மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் வேலை பார்்க்கும் தொழிலாளர்களுக்கு டீ வாங்குவதற்காக சைக்கிளில் கடைக்கு சென்றார்.

  சத்திரப்பட்டி ரோடு சொக்கலிங்கபுரம் விலக்கில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்த கோபால் (38) என்பவரை கைது செய்தார்.

  Next Story
  ×