search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டல அள்ளி அரசு பள்ளியில்   உலக ஓசோன் தின விழாவை முன்னிட்டு   மாணவ, மாணவியருக்கு தென்னங்கன்று
    X

    பள்ளிக் குழந்தைகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய போது எடுத்த படம்.

    குண்டல அள்ளி அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு தென்னங்கன்று

    • அரசு நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா நடந்தது.
    • தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி, அவற்றை நடவு செய்யும் முறை குறித்தும் விளக்கம் அளித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் குண்டல அள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா நடந்தது.

    விழாவில் பேசிய அனைவரும், 'மனித குலமும், இதர உயிரி னங்களும் இந்த மண்ணில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ உதவுவது ஒசோன் படலம் தான். அதன் வாழ்வு நீடித்தால் தான் இந்த மண்ணில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகை உயிரினங்களின் வாழ்வும் நீடிக்கும்.

    வசதிக்காகவும், சொகுசுக்காகவும் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை ஓசோனை பாதிக்கிறது. இதுபோன்ற உபகரணங்களின் துணை யின்றி குழுமையான காலநிலையை நீடிக்கச் செய்ய மரங்கள் பேரூதவி யாக உள்ளன. மரங்கள் மண்ணின் வரங்களாக உள்ளன. எனவே, மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்போம் என்றனர்.

    பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர்கள் சுதாகரன், அண்ணாதுரை, காரிமங்கலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    'இயற்கையைக் காப்போம்' அமைப்பின் நிறுவன தலைவர் தாமோ தரன் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி, அவற்றை நடவு செய்யும் முறை குறித்தும் விளக்கம் அளித்தார். விழா முடிவில் ஆசிரியர் ராகவேந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×