search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    குளித்தலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • குளித்தலையைச் சேர்ந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • குளித்தலை பேருந்து நிலையம் எதிரே உள்ள கடைகளில் முன்பிருந்த பெயர் பதாகை, சன்ஷேடு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.

    கரூர் :

    கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவியிடம், குளித்தலையில் வியாபாரிகள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவற்றை உடனே அகற்ற வேண்டுமென குளித்தலை நகர்மன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் புகார் அளித்தனர். இதையடுத்து குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சிக்கு கோட்டாட்சியர் புஷ்பாதேவி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து குளித்தலை நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பஜனை மடம் பகுதியில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கடந்த ஆக. 17 ஈடுபட்டனர். இதற்கு குளித்தலையைச் சேர்ந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அப்போது ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் குளித்தலை சுங்கவாயிலிருந்து, பெரியபாலம் வரை நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளர் சந்திரமோகன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    குளித்தலை பேருந்து நிலையம் எதிரே உள்ள கடைகளில் முன்பிருந்த பெயர் பதாகை, சன்ஷேடு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. தொடர்ந்து சுங்கவாயில் முதல் பெரியபாலம் வரை கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×