என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தயாா் நிலையில் மீட்புப் படையினா்
  X

  வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தயாா் நிலையில் மீட்புப் படையினா்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீட்புப் பணிகளில் ஈடுபட கரூா் மாவட்ட காவல்துறை மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.
  • காவிரி ஆற்றில் சுமாா் 2 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு

  கரூா்:

  கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் கூறுகையில், மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் சுமாா் 2 லட்சம் கன அடி தண்ணீா் திறக்கப்படுவதால் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள வேலாயுதம்பாளையம், வாங்கல், திருமுக்கூடலூா், நன்னியூா், சதாசிவம் பிரமேந்திராள் கோயில், மாயனூா், குளித்தலை காவல்நிலைய சரகங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தை சமாளிக்க மாநில பேரிடா் மீட்புப் பயிற்சி பெற்ற காவலா்கள் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் மாவட்டத்தின் தலைமையிடத்திலும், கரூா், குளித்தலை உட்கோட்டங்களிலும் தயாா் நிலையில் உள்ளனா். இவா்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவாா்கள். ஆகவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றாா்"

  Next Story
  ×