search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    குறைதீர் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • குறைதீர் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்க கோரிக்கை மனு அளித்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 34 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தேர்வானவர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகள்

    2021க்கு பாராட்டு சான்றிதழும், தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை கே.ஆர்.ரக்‌ஷனா, புலியூர் ராணி மெய்யம்மை அரவு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, குளித்தலை சுபம் கல்வி அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டது. மொத்தம் 34 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கரூர் தேசிய பார்வையற்றோர் நல இணையம் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான முதியோர் ஓய்வூதியத்தொகையை ரூ.2,000மாக உயர்த்தி வழங்கவேண்டும்.

    உதவித்தொகையை அவரவர் வீட்டுக்கு சென்று வழங்கவேண்டும். பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேசாதோர் ஆகியோர்களுக்கு செல்போன் உடனடியாக வழங்கவேண்டும். கூட்டுறவு வங்கி கடன் ரூ.50,000 பெற 2 அரசு ஊழியர்கள் ஜாமீன் கையெழுத் திடவேண்டும் என்பதில் விலக்கு அளிக்கவேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    Next Story
    ×