search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
    X

    மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

    • கவிமணி பள்ளியில் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு
    • சிகிச்சையில் இருந்த 21 பேர் டிஸ்சார்ஜ் ; 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டாரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

    இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நேற்று மதியம் மாணவிகளுக்கு சாதம், சாம்பார், அவித்த முட்டை ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவிகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சில மாணவி களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து வாந்தி மயக்கம் எடுத்த மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். 25 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பெற்றோர் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கலெக்டர் அரவிந்த், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் நலம் விசாரித்தனர். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து பேசினார்.

    மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் என அனைவரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் .

    மாணவிகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. மாணவிகள் சாப்பிட்ட உணவில் வண்டு கிடந்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிைலயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 25 மாணவிகளில் 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதை எடுத்து தற்போது 4 மாணவிகள் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். 4 மாணவிகளையும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கல்வி அதிகாரிகளும் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து பேசினர். மேலும் கவிமணி பள்ளியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கவிமணி பள்ளியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். அதை உடனடியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கவிமணி பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட் டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது. மதிய உணவை தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய தகவல்களை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×