search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 29 தேதி தொடங்குகிறது
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 29 தேதி தொடங்குகிறது

    • விழா நாட்களில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
    • கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    29-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு நாராயணிய பாராயணம், மாலை 5 மணிக்கு ஆச்சரியவரணம், முளையிடல், பிரசாத சுத்தி, அஸ்த்ரகலச பூஜை, ராக்‌ஷோக்ன ஹோமம், வாஸ்து கலச ஹோமம், வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்யாகம் அத்தாழ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, மாலை 7 மணிக்கு சுரதவனம் முருகதாஸ் குழுவினரின் பக்தி இசை சொற்பொழிவு ஆகியன நடைபெறுகிறது.

    30-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், முளபூஜை, அர்ச்சனா விக்ரகம் பாலாலயத்தில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளுதல், பிம்பசுத்தி, சதுர்சுத்தி, தாரை, பஞ்ச கவ்யம், பஞ்சகம், கலபூஜை, கலசாபிஷேகம், பிராயசித்த ஹோமம், உச்சபூஜை ஆகி யனவும், ஜூன் 30-ந் தேதி காலை 6 மணிக்கு அபிஷேகம் 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 5 மணிக்கு பகவதி சேவை, குண்டசுத்தி, முள பூஜை, அத்தாழ பூஜை, தொடர்ந்து பூவங்காபறம்பு ஆதிரா வழங்கும் ஆன்மீகச் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் தியாநாயர் வழங்கும் பரத நாட்டியம் ஆகியன நடை பெறுகிறது.

    ஜூலை 1-ந்தேதி காலை 5 மணிக்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உட்பட திருவம்பாடி கிருஷ்ணன் கோவில், குலசேகரப்பெருமாள் கோவில்களில் கணபதி ஹோமம் மற்றும் முள பூஜை, சாந்தி ஹோமம், அற்புத சாந்தி ஹோமம், காலை 6 மணிக்கு அபிஷேகம் மாலை 5 மணிக்கு ஆச்சாரிய வரணம், முளையிடல், பிரசாத சுத்தி, அஸ்த்ராகலச பூஜை, வாஸ்து கலசம், வாஸ்து ஹோம, , மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கொல்கத்தா முகுல் முகர்ஜியின் பரதநாட்டியம் ஆகியன நடைபெறுகிறது.

    ஜூலை 2,3,4,5 தேதி களில் கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பூஜைகள் நடைபெறும்.ஜூலை 2-ந்தேதி இரவு 7 மணிக்கு பிந்து லெக்ஷ்மி வழங்கும் கிருஷ்ணகதா நடனம், 3-ந்தேதி மாலை 5 மணிக்கு பவநேத்திரா குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு 7 மணிக்கு நாமக்கல் நாட்டியாஞ்சலி குழு சரிதா பிள்ளையின் பரதநாட்டியம், 4-ந்தேதி மாலை 5 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் வழங்கும் உபந்தியாசம், இரவு 7 மணிக்கு காணிமடம் குழுவினர் வழங்கும் நர்த்தன ரம்மிய பஜனை, 5-ந்தேதி மாலை 5 மனிக்கு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா வழங்கும் அருளுரை, இரவு 7 மணிக்கு சென்னை ஊர்மிளா சத்யநாராயணன் குழுவினரின் பரதநாட்டியம் ஆகியன நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக நாளான ஜூலை 6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம் உபதேவன்களுக்கு பிரதிஷ்டை, பஞ்சவாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 முதல் 5.50-க்குள்ளானநேரத்தில் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6.00 முதல் 6.50 வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகப்பெருவிழா நடைபெறுகிறது. வேத மந்திரம் முழங்க கும்பங் களுக்கு புனித நீர் ஊற்றப்ப டுகிறது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியை அம்பலக்கடை புலவர் ரவீந்திரன், வெள்ளாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீனாம்பிகா ஆகியோர் வர்ணனை செய்கின்றனர். காலை 7 மணிக்கு இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 8 மணிக்கு முளவிளை ஸாத்விகா சமாஜ இசை நாட்டிய அகாடமி சார்பில் "துவாபர யுகத்தின் சிறப்பு" என்னும் தலைப்பில் பரதநாட்டியம் நடைபெறுகிறது. 9 மணிக்கு திருக்கோவிலூர் ஜீவ.சீனுவாசன் வழங்கும் ஞான அமுது தேனிசை நடைபெறுகிறது.

    மாலை 5 மணிக்கு குளச்சல் சிவசங்கர் வழங்கும் கும்பாபிஷேக மகிமை ஆன்மீக சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி பஜ னை ஆகியன நடைபெறு கிறது.

    7-ந்தேதி காலை கணபதி ஹோமம், கொடிமர பிரதிஷ்டை, முள பூஜை, சதுர்த்த கலசத்திற்கு பத்மமிடல் ஜூலை 7-ந்தேதி காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 7 மணிக்கு திருவனந்தபுரம் கோபிகா வர்மா வழங்கும் மோகினியாட்டம், 8. ம் தேதி பல்வேறு பூஜைகள், இரவு 7 மணிக்கு பக்தி பஜனை, 9-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கொடிமர பிரதிஷ்டை, மாலை 5 மணிகு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை, மாலை 5 மணிக்கு கோயிலைச்சுற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளில் தீபமேற்றும் லட்ச தீப விழா, இரவு 7 மணிக்கு பரத நாட்டியம் ஆகியன நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், எம்பி. விஜய்வசந்த் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏ.கள் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    விழா நாட்களில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.கும்பாபி ஷேக விழா ஏற்பாடுகளை திருநெல்வேலி அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரிய தர்ஷினி, சுசீந்திரம் இணை ஆணையர் ஞான சேகர், கோவில் மேலாளர் மோகன்குமார், மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×