search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் இரவு 2 ஷிப்ட்டுகளாக போலீசார் கண்காணிப்பு - தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை
    X

    குமரியில் இரவு 2 ஷிப்ட்டுகளாக போலீசார் கண்காணிப்பு - தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை

    • பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
    • பயணிகளின் உடமைகள் சோதனைக்குட்படுத்தப் பட்டு வருகிறது. ரெயில்வே பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள் ளது.

    இதையடுத்து அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகை யில் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு உள்ளனர்.குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆஸ்ரா கர்க் ஆய்வு மேற்கொண்டார்.

    குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் நாகர்கோவில், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிஷனல் உட்பட்ட முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் 2 ஷிப்ட்டு களாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த பகுதி களில் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார் கள். மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற் கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வரு கிறார்கள்.

    கோவில்களிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பயணிகளின் உடமைகள் சோதனைக்குட்படுத்தப் பட்டு வருகிறது. ரெயில்வே பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். லாட்ஜுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×