search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று 2130 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் இன்று 2130 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

    • கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது
    • முழு ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப் படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா தடுப்பூசியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் பலரும் செலுத்தாமல் இருந்ததையடுத்து அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் ஒரு சிலர் இருந்து வருகிறார்கள். அவர்களை கணக்கெடுத்து அவர்களை தடுப்பூசி செலுத்த குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து இன்று ெமகா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவ தும் நடந்தது.

    அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட முழுவதும் இன்று ஒரே நாளில் 2,130 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையங் களில் தடுப்பூசி செலுத் தப்பட்டது.

    மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், ெரயில் நிலைய பகுதிகளில் சென்று சுகாதாரத் துறையினர் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். வேப்பமூடு பூங்காவிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் யாராவது தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.

    பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் சிலருக்கும் சுகாதாரத்துறையினர் பஸ்சில் ஏறி தடுப்பூசி செலுத்தினர். கன்னியா குமரியில் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    சின்னமுட்டம், கோவளம், வள்ளவிளை, தூத்தூர், குளச்சல் போன்ற மீனவ கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கண்டறிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தடுப்பூசி செலுத் தப்பட்டது.

    காலை தொடங்கிய மெகா தடுப்பூசி முகாமில் மதியம் 11 மணி வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பக்கத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் குமரி மாவட்டம் என்பதை உறுதி செய்யும் வகையில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×