search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரில் துப்பாக்கி முனையில் நகை பறிப்பு
    X

    நாகரில் துப்பாக்கி முனையில் நகை பறிப்பு

    • பெண் உள்பட 3 கொள்ளையர்கள் சிக்கினர்
    • தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் உமர் பாபு (வயது 53). வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். தற்பொழுது இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று இரவு உமர் பாபுவின் மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் உமர் பாபு மட்டும் தனியாக இருந்தார்.

    ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு ஜாஸ்மினும், மாமியார் மற்றும் மகளும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டினுடைய மின் விளக்கு கள் அணைக்கப்பட்டு இருந்தது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஜாஸ்மின் கணவரை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து பர்தா அணிந்த 2 நபர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் ஜாஸ்மின் யார் என்று கேட்டார். அப்போது அவர்கள் நாங்கள் உங்களது உறவுக்காரர்கள் என்று கூறினார்கள். உமர் பாபு குறித்து கேட்டபோது சரிவர பதில் கூறவில்லை. உள்ளே சென்று பார்த்த போது உமர் பாபுவின் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே ஜாஸ்மின் கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடினார்கள். ஜாஸ்மினின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் கொள்ளை யர்களை பிடிக்க முயன்ற னர். அப்போது ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். மேலும் கொள்ளையர்கள் வந்த காரையும் பொதுமக்கள் பிடித்தனர். கொள்ளையன் பிடிபட்டது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த காரையும் சோதனை செய்தனர். அப்போது போலி பதிவு எண் கொண்ட கார் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஜாஸ்மினிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் குறித்து அடையாளங்களை அவர் தெரிவித்தார்.

    தங்களது வீட்டிற்கு பர்தா அணிந்து 2 பேர் வந்ததில் ஒருவர் பெண் என்றும், மற்றொருவர் ஆண் என்று கூறினார். எனவே கொள்ளை சம்பவத்தில் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை யர்கள் 2 பேர் நேற்று மதியம் பர்தா அணிந்து உமர் பாபு வீட்டிற்குள் வருவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. எனவே கொள்ளையர்கள் காலை யிலிருந்து நோட்டமிட்டு இந்த கைவரிசை யில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற துப்பாக்கியையும், அரிவாளையும் போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பிளாஸ்டிக் துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசா ரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கொள்ளை வழக்கில் தப்பி ஓடிய பெண்ணையும், வாலி பர் ஒருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×