என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குளச்சலில் மீன் வரத்து பாதிப்பு
  X

  குளச்சலில் மீன் வரத்து பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ‘துழுவன் சாளை’ க்கு திடீர் மவுசு
  • விலை இருமடங்கு உயர்வு

  கன்னியாகுமரி:

  குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது.குளச்சல் பகுதியில் கடந்த 5 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுகிறது.இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

  கட்டுமரங்கள் மணல் பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை மீன்துறை மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கடந்த 1-ந் தேதி வானிலை எச்சரிக்கை அறிவித்திருந்தது. இந்த எச்சரிக்கை 6-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். மழை விட்டுவிட்டு பெய்து வந்தாலும் கடலில் காற்று தொடர்ந்து வீசி வருகிறது. தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இத னால் இன்று 5-வது நாளாக குளச்சலில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

  இதனால் குளச்சலில் 5-வது நாளாக மீன்பிடித் தொழில் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே இன்று ஒரு சில கட்டுமர மீனவர்கள் அருகில் மீன் பிடிக்க சென்றனர்.தொலைவில் செல்லாததால் குறைவான மீன்களே கிடைத்தன. அதில் துழுவன் சாளை, நெத்திலி மீன்கள் சிக்கியது. அவைகளை மீனவர்கள் ஏலக்கூடம் கொண்டு வந்து விற்பனை செய்தனர். 500 எண்ணம் கொண்ட துழுவன் சாளை இன்று ரூ.2100 முதல் ரூ.2400 வரை விலை போனது.வழக்கமாக துழுவன் சாளை 500 எண்ணம் ரூ.500 முதல் ரூ.600 வரைதான் விலை போகும். வேறு மீன்கள் கிடைக்காததால் மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து துழுவன் சாளையை வாங்கி சென்றனர்.

  இதுபோல் குறைவாக கிடைத்த நெத்திலி மீன் ரூ.2800 முதல் ரூ.3000 வரை விலை போனது.வழக்கமாக இது ரூ.1000 முதல் ரூ.1500 வரைதான் விலை போகும் என்பது குறிப்பிட்டத்தக்கது. கடலில் காற்று தணிந்தால்தான் அனைத்து கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லும், அப்போதுதான் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

  Next Story
  ×