search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 7 குழந்தைகள் உள்பட 60 பேருக்கு கொரோனா
    X

    குமரி மாவட்டத்தில் 7 குழந்தைகள் உள்பட 60 பேருக்கு கொரோனா

    • தடுப்பூசி செலுத்த பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    • இரணியல் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொேரானா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் அதன் பிறகு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக திருவட்டார், முஞ்சிறை ஒன்றியங்களில் அதிகமா னோர் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை பகுதி களிலும் பரவ தொடங்கியது. கொரோனா அதிகரிக்க தொடங்கி தையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நட வடிக்கை மேற்கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 851 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர் தாலு காக்களில் தலா 4 பேரும், குருந்தன்கோடு, திருவட்டார் தாலுகாக்களில் தலா 7 பேரும், மேல்புறம், நாகர்கோவில் மாநகர பகுதியில் தலா 6 பேரும், தக்கலை தாலுகா வில் 2 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    முஞ்சிறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட 60 பேரில் 22 பேர் ஆண்கள், 38 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 7 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

    கடந்த 21 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை

    400-ஐ நெருங்கி வருகிறது. கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    நாளை (சனிக்கிழமை)அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருப்ப வர்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானயவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்புடன் வரும் குழந்தைகளை கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகளுடன் மாணவர்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இரணியல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் இருந்து வந்தது.

    அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி, வீட்டு தனிமை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×