search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    X

    குழித்துறையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

    • 189 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
    • சைக்கிள் பேரணி மார்த்தாண்டம், தக்கலை வழியாக பார்வதிபுரம் சந்திப்பு வரை சென்றது. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி :

    44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் முதல் முறையாக அரங்கேறும் செஸ் ஆட்டத்தில் மிக உயரிய போட்டியான இதில் இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர் லாந்து உட்பட 189 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    ஆகவே இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. இன்னொரு பக்கம் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் என நடைபெற்று மக்களை ஈர்த்து வருகிறது.

    இந்தப் போட்டியை சிறப்பாகவும் என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் இருந்து செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். பொறியாளர் பேரின்பம் முன்னிலை வகித்தார்.

    இந்த சைக்கிள் பேரணி மார்த்தாண்டம், தக்கலை வழியாக பார்வதிபுரம் சந்திப்பு வரை சென்றது. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.பி.ராஜன், குழித்துறை நகர இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, கிறிஸ்டோபர், மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், விளவங்கோடு தாலுகா செஸ் அசோசியேசன் தலைவர் சிவராஜ், நகராட்சி மேலாளர் ஜெயின் பெல்லார்மின், ஸ்டான்லி, குழித்துறை நகராட்சி வழக்கறிஞர் ஷாஜி குமார், கவுன்சிலர்கள் விஜூ, ரீகன், ரோஸ்லெட், ஷாலின் சுஜாதா, , பெர்லின் தீபா, ரவி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×