search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இதுவரை 1,46,552 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
    X

    குமரி மாவட்டத்தில் இதுவரை 1,46,552 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

    • நேற்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் 2200 இடங்களில் நடந்த முகாமில் 28,001 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.நேற்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.மாவட்டம் முழுவதும் 2200 இடங்களில் நடந்த முகாமில் 28,001 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    இதில் முதல் டோஸ் தடுப்பூசி 1748 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 3867 பேரும், பூஸ்டர் தடுப்பூசி 22,108 பேரும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 126 பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 152 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    மெகா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி அதிகமானோர் செலுத்தி உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 12 லட்சத்து 42,471 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 10 லட்சத்து 87 ஆயிரத்து 537 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மாவட்டம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 552 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×