search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாணுமாலயன்சுவாமி கோவில் மார்கழி திருவிழா
    X

    சுசீந்திரம் மக்கள் மார் சந்திப்புக்கு புறப்பட்ட வேளிமலை முருகன் ஊர்வலம் இன்று வடசேரி வந்த போது எடுத்தபடம்.

    தாணுமாலயன்சுவாமி கோவில் மார்கழி திருவிழா

    • சுசீந்திரத்தில் இன்று இரவு மக்கள் மார் சந்திப்பு
    • கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தங்கள் தாய், தந்தையர் விழாவில் பங்கேற்க வரும் நிகழ்வே மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி ஆகும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாளான நேற்று (29-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநா யகர் திருவீதியுலா, காலை 8 மணிக்கு சந்திரசேகர் ஸ்ரீகௌரி பூங்கோயில் வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மாலை தமிழ் இசை நிகழ்ச்சி, இரவு புஷ் பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் 3-ம் நாளான இன்று காலை 8 மணிக்கு சுவாமி திருவீதியுலா வருதல் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி' நடக்கிறது.

    கோட்டார் வலம் புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசு வாமி ஆகியோர் தங்கள் தாய், தந்தையர் விழாவில் பங்கேற்க வரும் நிகழ்வே மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி ஆகும். தொடர்ந்து திருவிழா முடியும் வரை கோவிலில் இவர்கள் தங்கி இருப்பார் கள். இந்த நிகழ்ச்சியை காண இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    5-ம் திருவிழாவான 1-ந்தேதி காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன், சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளை கருடன் வலம்வ ரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான ஜனவரி 5-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    அன்று குமரி மாவட்டத் துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும். அன்று இரவு 12 மணிக்கு, சப்தாவர்ணம் நடைபெறும். ஜனவரி 6-ம் தேதி 10-ம் திருவிழா நடக் கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனம் நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆறாட்டு நடக்கிறது.

    Next Story
    ×