search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் பலாப்பழம் கிலோ ரூ.20-க்கு விற்பனை
    X

    சாலையோர கடையில் பொதுமக்கள் ஆர்வமாக பலாப்பழம் வாங்கிய காட்சி.

    உடன்குடி பகுதியில் பலாப்பழம் கிலோ ரூ.20-க்கு விற்பனை

    • உடன்குடி பகுதியில் பலாப்பழங்களை கிராமம் கிராமமாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
    • தற்போது ஒரு கிலோ ரூ.20-க்கு பலாப்பழம் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    உடன்குடி:

    தற்போது பல வகையான பழங்களின் விற்பனை சீசன் தொடங்கிவிட்டது. மாம்பழம், அன்னாசி பழம், தர்பூசணி, கொய்யாபழம் உட்பட பல வகையான பல்வேறு பழங்களின் சீசன் தொடங்கி வீதி வீதியாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் பலாப்பழம் விற்பனையும் ஒன்றாகும். உடன்குடி பகுதியில் பலாப்பழங்களை மினி லாரி, தள்ளுவண்டி போன்ற பல்வேறு வாகனங்களில் ஏற்றி கிராமம் கிராமமாக கொண்டு சென்று ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கின்றனர்.

    இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். முக்கனிகளில் ஒன்றான கனி பலாப்பழம் ஆகும். தற்போது குறைந்த விலையில் அனைவரும் வாங்கும் படியாக விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×