search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் சூரியகாந்தி விதை விளைச்சல் அதிகரிப்பு   வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
    X

    ஒட்டன்சத்திரம் அருகே சூரியகாந்தி பூக்கள் அதிகளவு பூத்துகுலுங்குவதை படத்தில் காணலாம்.

    ஒட்டன்சத்திரத்தில் சூரியகாந்தி விதை விளைச்சல் அதிகரிப்பு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி

    • சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகச் சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது.
    • சூரியகாந்தி விதைகளிலிருந்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான மருந்தும் தயாரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொத்தயம், வல்லக்குண்டாபுரம், போடுவார்பட்டி, கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சூரியகாந்தியை பயிரிட்டுள்ளனர்.

    இந்த பயிர் சித்திரை மாதத்திலிருந்து 3 மாதங்கள் பயிர் செய்யக்கூடியதாகும். சூரியகாந்தி விதைகள் பொதுவாக எண்ணைவித்துக்காக பயன்படும் எண்ணையில் உள்ள விட்டமின்-இ இதயம் வாஸ்குலார், மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரியகாந்தி விதைகள் எண்ணைக்காக மட்டுமே அல்லாமல் இளைமையாக இருக்கவும் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகச் சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. சூரியகாந்தி பயிரிட்டுள்ள ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வெற்றிச் செல்வன் என்பவர் கூறியதாவது,

    ஒட்டன்சத்திரம் பகுதியில் பயிரிடப்படும் சூரியகாந்தி விதைகள் வெள்ளகோவில், ஈரோடு, பெங்களூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வர். கடந்தாண்டுகளில் ஒருகிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட சூரியகாந்தி விதைகள் தற்போது ஒருகிலோ ரூ.70- வரை வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது. சூரியகாந்தி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணைகள் நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலை நாடுகளில் ஊட்டச்சத்துக்கள் தருவதில் முன்னோடியாக இருப்பதால் சிற்றுண்டியாகவே பயன்படுத்துகின்றனர். உடற்பயிற்சி செய்வதற்கு சூரியகாந்தி விதைகளில் உள்ள தயாமின் விட்டமின் பி-1 எனப்படும் சக்திவாய்ந்த சாறு உள்ளது. இது உடலில் ஆற்றல் உற்பத்தியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தும் என்சைம்கள் நிறைந்துள்ளதாலும், இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தி இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மேலும் சூரியகாந்தி விதைகளிலிருந்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான மருந்தும் தயாரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர் என்றார்.

    Next Story
    ×