search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோட்டில்   தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
    X

    பாலக்கோட்டில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

    • 260 பள்ளி வாகனங்களை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆய்வு செய்தார்.
    • தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பாலக்கோடு,

    பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் தீடீர், தீடீரென்று விபத்துக்குள்ளாகி மாணவர்கள் பாதிப்புகுள்ளாகி வருவதால், தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 260 பள்ளி வாகனங்களை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆய்வு செய்தார்.

    அதில் குறைபாடு களுடைய 12 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாக னங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கு செயல்வி ளக்கமும், வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு அனைப்பது குறித்தும்,

    ஓட்டுநர்களுக்கு ஹேன்ட் பிரேக்கின் பயன்பாடு குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்கு வது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைப்பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×