search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோட்டில்   நீர் பாசன கால்வாய் திட்ட  பணிகள் குறித்து ஆய்வு
    X

    பணிகள் நடைப்பெற்று வருவதை சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாலக்கோட்டில் நீர் பாசன கால்வாய் திட்ட பணிகள் குறித்து ஆய்வு

    • நீர் பாசன கால்வாய் திட்டத்தை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கியது.
    • இப்பணிகளை சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் கடந்த 25 வருடங்களாக போதிய மழை இன்றி கடுமையான வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேலை தேடி கூலி தொழிலாளியாக வெளி மாவட்டம், அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டு வந்தது.இதனை போக்கும் விதமாக பாலக்கோடு சுற்றியுள்ள 13 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு ஜெர்தலாவ் கால்வாய் 5 கி.மீட்டரில் இருந்து பிரிவு கால்வாய் அமைத்து புலிகரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல 14 கி.மீ தூரம் வரை நீர் பாசன கால்வாய் திட்டத்தை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கியது.

    அதனை தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த மாதம் இப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த பணிகள் வேகமாக நடைப்பெற்று வரும் நிலையில் இப்பணிகளை சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பணிகளை தாமதமின்றி விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர்கள் சாம்ராஜ் ,வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×