என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மொரப்பூரில் பால் வேன் மோதி பீகார் வாலிபர் சாவு
  X

  மொரப்பூரில் பால் வேன் மோதி பீகார் வாலிபர் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பால் பாரம் ஏற்றி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • சிகிச்சை பலனின்றி விஜயமுகார் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

  தருமபுரி,

  பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜயமுகார் (வயது20). சுராஜ் (21) ஆகிய இருவரும் தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணாநகர் பகுதியில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

  இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக பால் பாரம் ஏற்றி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

  உடனே அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயமுகார் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

  இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×