search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்
    X

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன், ஒய்.பிரகாஷ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்

    • நீட் தேர்வால் மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு சிதைந்து, பலர் உயிரை மாய்த்து கொள்ளும் நிலை உள்ளது.
    • இந்த நீட் தேர்வை ரத்து செய்யகோரி பல முறை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா மல் உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாட்டு மாண வர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர் கொல்லி யாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பா.ஜனதா அரசு- தமிழக கவர்னரை கண்டித்து நேற்று மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ., (கிரு ஷ்ணகிரி மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவ டைந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசும் போது, நீட் தேர்வால் மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு சிதைந்து, பலர் உயிரை மாய்த்து கொள்ளும் நிலை உள்ளது.

    இந்த நீட் தேர்வை ரத்து செய்யகோரி பல முறை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா மல் உள்ளது. எனவே நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    இந்த உண்ணாவிரதத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச் செல்வன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பி.எஸ்.சீனி வாசன், மாவட்ட அவைத் தலைவர்கள் தட்ரஅள்ளி நாகராஜ், யுவராஜ், கிருஷ்ணகிரி நகர செய லாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மகளிர் அணி பிரசார குழு செய லாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி, மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் இக்ரம் அகமது, மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகி டாக்டர் நவீன் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட் டத்தின் போது, நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர் களின் பேட்டி, மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் நீட் தேர்வு குறித்து பேசியதை எல்.இ.டி. டி.வி. மூலமாக ஒளிபரப்பப் பட்டது.

    Next Story
    ×