search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்கமனஅள்ளி ஊராட்சியில்  ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
    X

    நலத்திட்ட உதவி வழங்கப்பட்ட காட்சி.

    அக்கமனஅள்ளி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

    • பொதுமக்களிடம் இருந்து 229 மனுக்கள் பெறப்பட்டது.
    • 146 பயனாளி களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா வழங்கினார்.

    தருமபுரி,

    தர்மபுரி அடுத்த அக்கமன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அ நடுஅள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமையில்,மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது,

    இந்த முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, வட்டார வளர்ச்சி துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருந்து பொதுமக்களிடத்தில் 229 மனுக்கள் பெறப்பட்டு உரிய மனுக்களுக்கு உடனடியாக அந்தந்த துறையின் சார்பில் தீர்வு காணப்பட்டது.

    மேலும் 146 பயனாளி களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா வழங்கினார்.

    இந்த முகாமில் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், நிர்வாக அலுவலர் சசி பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×