search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளனர்
    • கொடைக்கானலில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாநில பொதுச் செயலாளர் காமராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு போல் அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். அரசாணை 101 மற்றும் 108 ரத்து செய்து தொடக்க கல்வி துறை தனித்து இயங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மருத்துவர்களுக்கு வழங்குவது போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பை வழங்க வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அறவழி போராட்டம் மூலம் எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த நிர்வாகிகள் தேர்தலில் மாநிலத் தலைவராக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் சேவியர், பொதுச்செயலாளராக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், பொருளாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த செல்வம், ஒருங்கிணைப்பாளராக மதுரையைச் சேர்ந்த செல்லபாண்டியன், தேர்தல் ஆணையாளராக அன்பழகன், மதுரை மாவட்ட தலைவராக ராமு, செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக செல்வம், திண்டுக்கல் மாவட்ட தலைவராக ஆல்பர்ட் டென்னிஸ், செயலாளராக கணேஷ் பிரபு, பொருளாளராக சேவியர் ஜோசப் பிரபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Next Story
    ×