search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச பஸ் பயணம் சிறப்பான திட்டம்  மாணவ, மாணவிகள் வசதிக்கு ஏற்ப   கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை
    X

    போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு நடத்தினார்.

    இலவச பஸ் பயணம் சிறப்பான திட்டம் மாணவ, மாணவிகள் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை

    • மாணவ, மாணவிகள் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை சேலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்தார்.
    • அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்ற சிறப்பான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது எஸ் ஆர் பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் லட்சுமணன் மற்றும் கிளை மேலாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக இரவு பகலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாமும் மக்களுக்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும். அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்ற சிறப்பான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் தமிழகத்திலேயே சிறப்பான திட்டமாக உள்ளது .

    மகளிர் மற்றும் மாணவ- மாணவிகள் அரசு பஸ்களில் அதிகமானோர் பயணிக்கிறார்கள், அவர்கள் நல்ல முறையில் பயணம் செய்ய அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் .அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் மாணவிகள் இனிவரும் நாட்களில் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு உள்ளது. கூடுதல் பஸ்களை இயக்கி மாணவ ,மாணவிகள் சிரமம் இன்றி அரசு பஸ்களில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×