என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலத்தில் இளம் பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் மோசடி
  X

  சேலத்தில் இளம் பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மர்ம நபர், தங்களது செல்போன் எண் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1.50 லட்சம் பரிசு
  • ஜி.எஸ்.டி மற்றும் சேவைக் கட்டணம் ரூ.58,982 உடனடியாக செலுத்த வேண்டும்

  சேலம்:

  சேலம் உடையப்ப செட்டி யார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி கவுதமி (வயது 28). இவரது செல்போனுக்கு கடந்த 19-ந் தேதி வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், தங்களது செல்போன் எண் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1.50 லட்சம் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையை பெறுவதற்கு ஜி.எஸ்.டி மற்றும் சேவைக் கட்டணம் ரூ.58,982 உடனடியாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

  இதை நம்பிய கவுதமி, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பணத்தை செலுத்திய பின் எந்த பரிசு தொகையும் கவுதமியின் வங்கி கணக்கிற்கு வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். மேலும் இதுபற்றி கவுதமி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×