என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வருசநாடு அருகே சேதம் அடைந்த தடுப்பணை விவசாயிகள் கவலை
  X

  சேதம் அடைந்த தடுப்பணையை படத்தில் காணலாம்.

  வருசநாடு அருகே சேதம் அடைந்த தடுப்பணை விவசாயிகள் கவலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மொட்டைபாறை மலை அடிவாரத்தில் மூல வைகை ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது.
  • மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.

  வருசநாடு:

  வருசநாடு அருகே மொட்டைபாறை மலை அடிவாரத்தில் மூல வைகை ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்பு வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

  இதனால் வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியதுடன் விவசாயமும் செழித்து காணப்பட்டது. இந்த நிலையில் தடுப்பணை கட்ட பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை.

  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக தடுப்பணை சேதமடைந்தது. சீரமைக்கபடாததால் அடுத்தடுத்து மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.

  இதனால் தடுப்பணையில் நீர் தேங்கி நிற்பதில்லை. எனவே வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

  தடுப்பணையை விரைவாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றியும் எந்தவித பயனும் இல்லை.

  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மொட்டைபாறை அருகே புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×