என் மலர்
ஈரோடு
தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் ,திருப்பூர் தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு 13 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலும் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மூலக்கரை, பெருந்துறை, சென்னிமலை போன்ற பகுதிகளில் தற்போது விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில இடங்களில் போலீசாருடனும் உயர் மின் கோபுரம் அமைக்கும் அதிகாரிகளுடனும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இன்னும் சில இடங்களில் விசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, 1885 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு என்று புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்கும் போது விவசாய நிலத்தில் அமைக்காமல் சாலையோரமாக கேபிள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களுக்கு முறையான இழப்பீடு மற்றும் வாடகை வழங்க வேண்டும். விவசாயிகள் அனுமதியின்றி காவல்துறை உதவியுடன் விவசாயிகளை மிரட்டி அத்துமீறி செய்யும் வேலையை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆனால் திட்டமிட்டபடி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்திருந்தனர். மேலும் ஈரோடு சம்பத் நகரில் இருந்து ஊர்வலகமாக செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் கொங்கு கலையரங்கம் போன்ற பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் டவுன் டிஎஸ்பி ராதா கிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்திற்குள் விவசாயிகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் வெளி ஊர்களிலிருந்து வரும் விவசாயிகளை தடுக்கும் வகையில் சோதனை சாவடி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி அங்குலம் அங்குலமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர் ஈரோடு சோலார், திண்டல் ,ரங்கம் பாளையம் கருங்கல்பாளையம் காவிரி சோதனைச்சாவடி போன்ற பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளது.
ஈரோடு:
மொடக்குறிச்சி அடுத்த பஞ்சலிங்க புரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 63). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று வரதராஜன் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடுக்கு வந்தார். பின்னர் பணியை முடித்துக்கொண்டு பஞ்சலிங்கபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனைக்கல்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக வரதராஜன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின்பக்க சக்கரம் அவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே வரதராஜன் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கரூர் ஈரோடு மெயின் ரோட்டில் சாலைப் புதூர் ஒத்தக்கடை இடைப்பட்ட பகுதியில் தார்சாலை போடும் பணி நடைபெற்று வந்தது.
தார் கலவை ஏற்றிய டிப்பர் லாரி முன்னே சென்று கொண்டு இருந்தது அப்போது ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிய லாரியை மோகனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பாஸ்கர் (38) என்பவர் ஓட்டி வந்தார். முன்னேசென்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி லாரி தீப்பிடித்து எரிந்தது. லாரி இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பாஸ்கர் வெளியே வர முடியாமல் லாரிக்குள் சிக்கி அலறி துடித்தார்.
அப்போது அருகில் இருந்த பள்ளியில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் ஹைவே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரி இடிபாடுகளில் சிக்கி தீக்காயங்களினால் துடி துடித்த டிரைவர் பாஸ்கரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருத்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஹை வே போலீசார் விபத்துக்குள்ளான லாரி, டிப்பர் லாரியை. அகற்றி போக்குவரத்தினை சரி செய்தனர். மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாஸ்கர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
மேலும் இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏ.டி.எம் மையத்தில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் உள்ளே சென்று ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றான். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் கர்நாடக மாநிலம் குசால் நகர் கூட மங்களூர் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 29) என தெரியவந்தது. சந்திரகுமார் பிழைப்புக்காக ஈரோடு வந்ததும் செலவுக்கு பணம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்தனர். பின்னர் அவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு அடுத்த சித்தோடு நால் ரோட்டில் உள்ள ஏடிஎம் மையத்தில் உள்ள எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு வீரபாண்டி ரெயில் நிலையத்திற்கும், மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரம் தெரியவில்லை.
போலீசாரின் விசாரணையில் அந்த அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.
அவர் வெள்ளை நீலம் கலந்த கோடு போட்ட சட்டை அணிந்து இருந்தார். சட்டை காலரில் சுரேஷ் கே குமரி என அச்சிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் உட்பட 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு 13 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலும் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது :-
1885 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு என்று புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். உயர்மின் கோபுரம் அமைக்கும் போது விவசாய நிலத்தில் அமைக்காமல் சாலையோரமாக கேபிள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களுக்கு முறையான இழப்பீடு மற்றும் வாடகை வழங்க வேண்டும். விவசாயிகள் அனுமதியின்றி காவல்துறை உதவியுடன் விவசாயிகளை மிரட்டி அத்துமீறி செய்யும் வேலையை நிறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் விவசாயிகள் திரளாக பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு கொல்லம்பாளையம் நேதாஜி வீதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2008-ம் ஆண்டு சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல், சறுக்கு போன்றவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக பூங்காவில் நடைபாதையும் உள்ளது.
இந்த பூங்காவிற்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் காலையும், மாலையும் வந்து ஆனந்தமாக விளையாடி வந்தனர். பொதுமக்கள் நடைபயிற்சியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக பூங்காவிற்குள் இழந்தை மரம் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
மேலும் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் உடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு விளையாட செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. நடைபாதையும் பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக காணப்படுவதால் நடைபயிற்சிக்கும் யாரும் செல்வதில்லை.
விளையாடுவதற்கு வேறு இடம் இல்லாததால் ஒரு சில குழந்தைகள் மட்டும் அந்த சிறுவர் பூங்காவிற்கு சென்று விளையாடி வருகிறார்கள். அவர்கள் விளையாடும்போது அங்குள்ள இலந்தை மரத்தின் முட்கள் குத்தி அவர்களுக்கு ரத்த காயமும் ஏற்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு விளையாடி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் இந்த பூங்காவை தவிர வேறு பூங்கா கிடையாது. இதனால் எங்கள் குழந்தைகள் வேறு வழியின்றி இந்த பூங்காவிற்கு சென்று விளையாடி வருகிறார்கள். இங்கு இலந்தை மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் அவற்றின் முட்கள் எங்கள் குழந்தைகளை குத்தி விடுகிறது.
மேலும் பூங்கா புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, பூரான் போன்றவைகளும் உள்ளன. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சிறுவர் பூங்காவில் வளர்ந்துள்ள இலந்தை மரம் உள்ளிட்ட செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய - மாநில அரசுகள் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்து உள்ள நிலையில் இவற்றுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை சொல்ல வில்லை. மத்திய அரசு பட்ஜெட் ஊக்கம் நம்பிக்கை தரும் பட்ஜெட்டாக இருந்திருந்தால் பங்கு சந்தையில் ஏற்றம் இருந்திருக்கும்.
மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் தினம் முதல் பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
உலக மையம் கொள்கை படி எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.
ஆனால் அமெரிக்கா நான் சொல்லும் நாடுகளுடன் தான் பொருளாதார வைத்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணைய் குறைந்த இடத்தில் வாங்கி வரும் ஒப்பந்தத்தை கைவிட்டு அமெரிக்கா நிர்பந்தத்தில் அதிக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் இடத்தில் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதன்மூலம் அயல்நாட்டு நேர் முதலீடு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்கிறது. கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவித்த பிறகு ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு சென்று உள்ளது. இதன் மூலம் பிரகடனம் செய்யாத வணிக போரை அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது. டிரம்புக்கு எதிராக வணிக போர் நடத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும்
விவசாயிகள் பாதிக்கும் திட்டத்தை பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றியதால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.
நீட் தேர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.
இவற்றிக்கு தீர்வு கிடைக்க இடதுசாரி அமைப்புகள் முன்னெடுத்து செல்லும்.
கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி புரிவோருக்கு இந்தியில் தேர்வு, தபால் துறையில் மத்திய அரசு ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவித்து உள்ளது தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.
இவர் அவர் கூறினார்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 27). இவர் பைக் மெக்கானிக். இவரது உறவினர் சென்னிமலை அடுத்துள்ள நாமக்கல் பாளையம் ரோடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் நவீன்அரசி (20). பி.காம் பட்ட வகுப்பு முடித்துள்ளார்.
இருவருக்கும் இவர்களது பெற்றோர் மாமன், அத்தை உறவாகும். இதனால் இருவரும் பல ஆண்டுகளாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய இருவரது பெற்றோரும் முடிவு செய்தனர்.
இதன் பேரில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இருவரது உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நவீன் அரசியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் நிற்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நவீன் அரசி வீட்டை விட்டு வெளியேறினார். இவரை காணவில்லை என அவரது பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் காதலர்கள் முருகானந்தம்- நவீன் அரசி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதை அறிந்த இருவரின் உறவினர்களும் போலீஸ் நிலையத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு போலீசார் இருவரின் பெற்றோர்களையும் சமாதானம் செய்ய அழைத்தனர். முருகானந்தத்தின் பெற்றோர் மட்டும் அங்கு வந்தனர். ஆனால், நவீன் அரசியின் பெற்றோர் அங்கு வர வில்லை.
இதனால் நீண்ட நேரம் அங்கு காத்திருந்த திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து மணமகனுடன் நவீன் அரசியை அனுப்பி வைத்தனர்.
சூரம்பட்டி:
கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று ஈரோடு மாநகர மாவட்ட காங் கிரஸ் கட்சி சார்பில் சூரம்பட்டி சரகத்துக்கு உட்பட்ட காளைமாடு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலைவகித்தார் .
இதில் முன்னாள் துணை மேயர் பாபு, மண்டல தலைவர் திருச்செல்வம்,அயுப்அலி, விவசாய பிரிவு பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் சித்ரா விஸ்வநாதன், மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, சின்னசாமி கண்ணப்பன் முகமது அர்சத், விஜய் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
இதேபோன்று தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையம், எல்.ஐ.சி நகரில் கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆர். எம்.பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செங்குளம் பழனிச்சாமி, வட்டார தலைவர்கள் முத்துகுமார், கோபாலகிருஷ்ணன் ,ராவுத்குமார், முத்துசாமி, சர்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவர் தளபதி ரமேஷ், மகளிர் காங்கிரஸ் கலா, சிவகுமார், மாணவரணி காங்கிரஸ் பயாஸ், இளைஞரணி காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபு , அரிப் அலி, துணைத் தலைவர்கள் வாசுதேவன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதி எல்.வி.ஆர். காலனியில் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போக்கு குவிந்து கிடக்கிறது.
இந்த குப்பைகளின் தூர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றார்கள்.
மேலும் காற்றில் இந்த குப்பைகள் பறந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களின் முகத்திலும் குப்பைகளின் கழிவுகள் பறக்கிறது. புழுதி மணலும் விழுந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனால் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஈரோடு மாநகராட்சியை கேட்டுக் கொண்டு உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு பகுதியில் நேற்று மாலையில் இருந்து இரவு 8 மணி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதே போல் பெருந்துறை பவானி, கொடுமுடி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகப்பட்சமாக 30.6 மி.மீ மழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல் சென்னிமலை பகுதியில் 27.6 மி.மீ மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெப்பம் தணிந்தது. குளிர்ச்சியான நிலை நிலவியது.
பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.






