என் மலர்

  நீங்கள் தேடியது "graduate girl"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பண்ருட்டியில் பட்டதாரி இளம்பெண் மாயமானார்.
  • படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர், வடலூரி ல் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 26-ந் தேதி இரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவர் காணாமல் போய்விட்டார்.

  அவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண்ணை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூடுதல் வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண்ணை கொடுமை செய்த கணவர்-குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • முதலியார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

  புதுச்சேரி:

  கூடுதல் வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண்ணை கொடுமை செய்த கணவர்-குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  முதலியார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மோகனபிரியா(வயது29). பி.டெக் பட்டதாரியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கும் காராமணிக்குப்பம் பூந்தோட்டம் வீதியை சேர்ந்த செந்தில்குமாருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மோகனபிரியாவுக்கு அவரது பெற்றோர் 15 பவுன் நகையும், மாப்பிள்ளை செந்தில்குமாருக்கு 3½ பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள், சீர்வரிசை பொருட்கள் வாங்க ரூ.1லட்சத்து 30 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை வழங்கினர்.

  அதன்பிறகு ஆடி வரிசைக்கு 4 கிராம் நகையும் செய்தனர். அதன் பின்னர் கூடுதல் நகை கேட்டு மோகனபிரியாவை கணவர் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்து வந்தனர்.

  மேலும் மோகன பிரியாவின் கல்வி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் மோகனபிரியா தனது வங்கி கணக்கில் இருந்தும், தனது தந்தை வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை கல்வி கடன் செலுத்தினார்.

  ஆனாலும் வேலைக்கு ஏதுவும் செல்லாத செந்தில்குமார் தொடர்ந்து மோகனபிரியாவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து செந்தில்குமாரும், அவரது தந்தை ராஜமாணிக்கம் மற்றும் உறவினர்களும் சேர்ந்து தொடர்ந்து மோகனபிரியாவை வரதசட்ணை கொடுமை செய்து வந்ததால் அவர் இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.
  • புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . அவரது மகள் தனம் (வயது 19). முதுநிலை பட்டப்படிப்பு முடித்து உள்ளார். சம்பவத்தன்று காலை தனம் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்து ள்ளார். எங்கு தேடியும் தனம் கிடைக்க வில்லை. விசார ணையில் த னம் அதே பகுதியை சேர்ந்த சபாபதியுடன் சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. சபாபதிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இது குறித்து சீனிவாசன் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தனத்தை தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசை வார்த்தை கூறி என்னை கர்ப்பிணி ஆக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

  சென்னிமலை:

  சென்னிமலை, ஈங்கூர் ரோட்டில் உள்ள காந்திஜி வீதியில் ஜவுளி தொழில் செய்து வருபவர் சாமியப்பன். இவர் சென்னிமலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் ரகு (வயது 32).

  சென்னிமலை அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் ஜீவிதா (26). பட்டதாரி. இவரது தந்தை மாதேஸ்வரன் இறந்து விட்டார். தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

  இவரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன் சாமியப்பன் மகன் ரகு என்கிற துரைராஜ் என்பவரின் ஜாதக நகலை தரகர் மூலம் கொடுத்தார். ஜாதகம் இருவருக்கும் பொருந்தியது. இதனால் ரகுவின் பெற்றோர் ஜீவிதாவை பெண் பார்க்க வந்தனர்.

  திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜீவிதாவும், ரகுவும் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர்.

  இந்த நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஏமாற்றி விட்டதாக ரகு மீதும் மற்றும் இதற்கு உடைந்தையாக அவருடைய பெற்றோர் மீதும் ஜீவிதா ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

  நான் பி.இ. படித்துள்ளேன். எனக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. திருமண தரகர் ஒருவர் மூலம் எனக்கு ரகுவின் ஜாதகம் வந்தது. அந்த ஜாதகம் எங்களுக்கு பொருந்தி இருந்ததால் திருமணம் உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு நான் ரகுவிடம் பேசி கொள்வதற்காக தனியாக எனக்கு ஒரு செல்போனை ரகு வாங்கி கொடுத்தார்.

  மேலும் எங்கள் வீட்டிற்கு ரகு அடிக்கடி வருவார். எங்கள் திருமணத்திற்கு மண்டபம் கிடைக்காமல் போனதால் திருமணம் தள்ளி கொண்டே போனது.

  இந்த நிலையில் நாங்கள் காம்ப்ளக்ஸ் கட்டி வந்தோம். அதற்கு ரகு ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாக இருந்தார். கடந்த ஆடி மாதம் ரகு எங்கள் வீட்டிற்கு வந்து கேக் வெட்டி எனக்கு கொடுத்தார். பின்னர் கடந்த டிசம்பர் 23 -ந் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு ரகு வந்தார். அப்போது எனது அம்மா வெளியூர் சென்று விட்டதால் நான் தனியாக இருந்தேன். அந்த தனிமையை பயன்படுத்தி ரகு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

  நான் எவ்வளவோ மறுத்தும் என் விருப்பத்திற்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். திருமணம் ஆவதற்கு முன்பே என்னை இப்படி செய்து விட்டீர்களே என நான் கதறி அழுதேன். அதற்கு அவர், நான் உயிர் உள்ளவரை உன்னை கை விடமாட்டேன் என சத்தியம் செய்தார்.

  மேலும் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என ரகு என்னிடம் சத்தியம் வாங்கினார். அதன் பின்னர் திருமணம் தள்ளிக்கொண்டே போனது. இதனால் நான் ரகுவை வர சொல்லி இது பற்றி கூறினேன். மேலும் மருத்துவ சோதனை செய்து பார்த்த போது நான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

  நான் பயந்து போய் ரகுவிடம் சொல்லி அழுதேன். அதற்கு கவலைப்படாதே, உன்னை எந்த சூழ்நிலையிலும் கை விடமாட்டேன் என சத்தியம் செய்து எனக்கு கருச்சிதைவு மாத்திரை வாங்கி கொடுத்தார்.

  திடீரென என் வீட்டுக்கு வருவதை ரகு நிறுத்தி கொண்டார். ஆனால் என்னை விட அதிகம் வசதியுள்ள வேறு பெண்ணை ரகு திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதும், இதற்காக ரகு வீட்டில் பந்தல் போட்டிருப்பதும் தெரியவந்தது.

  இதுபற்றி உறவினர்கள் மூலம் கேட்ட போது நல்ல முடிவை சொல்கிறோம் என கூறிய ரகுவின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்கள்.

  நானும், ரகுவும் பேசியதை செல்போனில் பதிவு செய்துள்ளேன். என் விருப்பத்திற்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து என்னை தாய்மை அடைய செய்தும், கருவை கலைத்தும் எனக்கு மாறாத களங்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய ரகு மீதும், அவரது பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த புகாரில் ஜீவிதா கூறியுள்ளார்.

  மேலும் ரகுவும், ஜீவிதாவும் சந்தித்த நெருக்கமான வீடியோ சிடி, செல்போன் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களையும் ஆதாரங்களாக ஜீவிதா போலீசில் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஈரோடு மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து ரகு மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாதவரம் அருகே திருமணம் செய்தவதாக கூறி பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
  செங்குன்றம்:

  மாதவரம் பால்பண்ணை மாத்தூர் இடைமா நகரைச் சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி பெண்ணும், கொசப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டிரைவர் அசோகனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

  இந்த நிலையில் இளம்பெண் மாதவரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அசோகன் தன்னை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி இருந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குபதிவு செய்து அசோகனை கைது செய்தார். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முகநூல் மூலம் காதலித்து பட்டதாரி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகைகளை மோசடி செய்த நடனக்கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
  சென்னை:

  கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரி இளம்பெண் ஒருவர், சென்னை போரூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி உள்ளார். அங்கிருந்தவாறே அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

  இவருக்கும் வடபழனி சாலிகிராமம், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வர் (வயது 25) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள விக்னேஸ்வர் நடனக்கலைஞர் ஆவார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

  இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்ணிடம் அவர் நெருங்கிப்பழகினார். மேலும் திருமணம் செய்வதாகவும் கூறி அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகையையும் பெற்று உள்ளார். இதைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்யுமாறு அந்த இளம்பெண் விக்னேஸ்வரிடம் கூறினார். ஆனால் பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி விக்னேஸ்வர் காலம் கடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் விக்னேஸ்வர் தன்னை ஏமாற்றுவதை புரிந்து கொண்ட அந்த இளம்பெண், அவரிடம் முறையிட்டார்.

  அப்போது, ‘உன்னை நான் திருமணம் செய்வும் மாட்டேன், வாங்கிய பணம் மற்றும் நகையையும் திருப்பி தரமுடியாது’ என விக்னேஸ்வர் கூறினார். மேலும் பணம் மற்றும் நகையை கேட்டாலோ, வெளியில் கூறினாலோ, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

  இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாரையும் இதைப்போல் அவர் ஏமாற்றி பணம் பறித்துள்ளரா? எனவும் விசாரித்து வரும் போலீசார், விக்னேஸ்வரின் முகநூல் கணக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

  பட்டதாரி பெண்ணை முகநூல் மூலம் காதலித்து 25 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த நடனக்கலைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் அம்பத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #Facebook #JewelTheft 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்ணாடம் அருகே திருமணம் செய்து வைக்கக்கோரி காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  பெண்ணாடம்:

  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவரது மகள் கனிமொழி (வயது 31). எம்.ஏ. பட்டதாரி.

  இவர் தற்போது பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சவுந்திர சோழபுரத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர் முருகேசன் என்பவரின் மகன் ஜானகிராமன் (32). இவர் செங்கல்சூளை நடத்தி வருகிறார். கனிமொழி- ஜானகிராமன் ஆகியோர் காதலித்து வந்தனர்.

  இந்த நிலையில் கனிமொழி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஜானகிராமனிடம் கூறினார். இதற்கு அவர் மறுத்தார்.

  இது தொடர்பாக விருத்தாசலம் மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் ஜானகிராமன் தலைமறைவாகி விட்டார். அதிர்ச்சி அடைந்த கனிமொழி பல இடங்களில் ஜானகிராமனை தேடியும், அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

  காதலித்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தலை மறைவாகி விட்டாரே என்று எண்ணி கனிமொழி மனவேதனையில் இருந்து வந்தார். இன்று காலை அவர் சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட் டுக்கு சென்றார். வீட்டில் இருந்த ஜானகி ராமனின் பெற்றோரிடம், உங்கள் மகனை கண்டுபிடித்து எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை.

  இதனால் ஆத்திரம் அடைந்த கனிமொழி, காதலன் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஜானகிராமனின் உறவினர்கள், கனிமொழியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் கனிமொழி கூறும்போது, ஜானகிராமன் என்னை திருமணம் செய்து கொள்ளும்வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்றார். தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டனர்.
  கவுண்டம்பாளையம்:

  சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் வித்யா (30). எம்.ஏ. பட்டதாரி. இவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இது குறித்து வித்யா சென்னை பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதற்கிடையே மணிகண்டன் கோவை சங்கனூர் வந்து விட்டார். இங்கு பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

  இந்த தகவல் கிடைத்ததும் வித்யா சென்னையில் இருந்து கோவை வந்தார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகன்யா, பாக்கியலட்சுமி ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். மணிகண்டனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

  அவர் தன் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாகவும், விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாலும் வித்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்தார்.பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற வித்யா தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கெஞ்சினார். ஆனால் மணிகண்டன் மனம் இறங்கவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திடீரென மேட்டுப்பாளையம் சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரை மகளிர் போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.நள்ளிரவு 1 மணி வரை வித்யா தனது போராட்டத்தை தொடர்ந்தார். பின்னர் தர்ணாவை கைவிட்டு கோவையில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்றார். #tamilnews
  ×