சின்னசேலம் அருகே திருமணமான வாலிபருடன் பட்டதாரி இளம்பெண் ஓட்டம்

சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார்.
சின்னசேலம் அருகே திருமணமான வாலிபருடன் பட்டதாரி இளம்பெண் ஓட்டம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . அவரது மகள் தனம் (வயது 19). முதுநிலை பட்டப்படிப்பு முடித்து உள்ளார். சம்பவத்தன்று காலை தனம் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்து ள்ளார். எங்கு தேடியும் தனம் கிடைக்க வில்லை. விசார ணையில் த னம் அதே பகுதியை சேர்ந்த சபாபதியுடன் சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. சபாபதிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இது குறித்து சீனிவாசன் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தனத்தை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com