என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு சென்னிமலை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு இ.எம்.எம். மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜ் (வயது40). இவர் பேக்கரி கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் மனைவி தைலா இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். ராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ராஜ் வேலைக்குச் சென்று வந்த நிலையில் வீட்டுக்கு சம்பளத்தை தொகையை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இதன் காரணமாக நேற்று இரவு கணவன் மனைவி இரண்டு பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த ராஜ் வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) எடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து ராஜுவை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து விட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகிரி பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கொடுமுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்ககாட்டு வலசு, எல்லக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு,

    மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக் கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்ப பாளையம், பெரும் பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக் கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர்.

    இந்த தகவலை ஈரோடு தெற்கு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் ஆவாரங்காட்டுவலசு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது42). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி சுமதி(36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலுச்சாமிக்கும் சுமதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் சுமதி கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதன்காரணமாக மனவேதனையில் இருந்த வேலுச்சாமி சம்பவத்தன்று வி‌ஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் வேலுச்சாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலுசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 3609 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று அது மேலும் அதிகரித்து வினாடிக்கு 3796 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.23 அடியாக உயர்ந்து உள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது நீலகிரி மலையில் உள்ள பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த தண்ணீரும் பவானி சாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைக்கு மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.

    இதனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.

    சத்தியமங்கலம் அருகே பணத்தகராறில் 55 வயது கள்ளக்காதலியை தீர்த்து கட்டிய 30 வயது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையில் வசித்து வந்தவர் தேவி (வயது 55). இவரது கணவர் பெயர் சுரேஷ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் லாரி கிளினராக உள்ளார்.

    அடிக்கடி வேலைக்கு லாரியில் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்துக்குப் போய் விடுவார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் தேவி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை பற்றி சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    தேவி பிணமாக கிடந்த இடத்தில் மது பாட்டில் ஒன்று கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் தான் இந்த கொலை ஏற்பட்டிருக்க கூடும் என தெரிந்தது.

    அதன்படி தேவியை கொலை செய்தது அவரது கள்ளக்காதலன் தான் என தெரிய வந்தது. தேவியின் கணவர் அடிக்கடி வேலைக்காக லாரியில் வெளியூர் சென்று விடுவதால் தேவிக்கும் கடம்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 30) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    தேவி கரும்பு வெட்டும் வேலைக்கு போய் வந்தார். அப்போது அவருடன் வாலிபர் ராமகிருஷ்ணனும் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பிறகு அதுவே கள்ளக்காதலாக மாறியது. தேவியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராமகிருஷ்ணன் சென்று தேவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். அப்போது இருவரும் மது குடித்து ஜாலியாக இருந்து உள்ளனர்.

    இந்த நிலையில் தனது கள்ளக்காதலனிடம் தேவி ரூ.7,500 கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை அவர் திருப்பி கேட்ட போது “என்ன அவசரம் பிறகு தருகிறேன்” என்று கூறினாராம்.

    சம்பவத்தன்று மது குடித்த நிலையில் தேவியுடன் ராமகிருஷ்ணன் உல்லாசம் அனுபவித்தார். அப்போது தேவியிடம் தான் கொடுத்த பணம் ரூ.7,500 கேட்டு உள்ளார். இதற்கு தேவி பணம் என்னிடம் இல்லை என்று கூற இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

    இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராமகிருஷ்ணன் அரிவாளால் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    மேற்கண்ட பரபரப்பு தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக சுற்றி திரிந்த கொலையாளி ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கொடிவேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎன்.பாளையம்:

    பெரியகொடிவேரி தேம்பிலி காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி கிட்டான்(70) இவர் கடந்த சனிக்கிழமை இரவு 9மணியளவில் கிட்டான் டி.ஜி.புதூரில் இருந்து கொடிவேரி செல்லும் சாலையில் சுப்பிரமணி மளிகை கடையருகே நடந்து சென்று கொண்டு உள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்த பரமேஸ் என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்த போது தடுமாறி முதியவர் கிட்டான் மீது மோதினார்.

    இந்நிலையில் கை கால்கள் மற்றும் மார்பு தலை பகுதிகளில் காயம்பட்ட கிட்டானை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்தோர் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பிறகு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்ட சென்று சிகிச்சைக்கு பெற்று வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிட்டான் இறந்து விட்டார். அதனையடுத்து சத்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்து முதியவர் கிட்டான் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோபி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபியை அடுத்த அளுக்குளி , மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நித்திய பிரியா (வயது 20). சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகிறது. கணவன் - மனைவி இருவரும் மகாலட்சுமி நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் வேலை வி‌ஷயமாக வெளியே சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பி வந்தார். வீட்டின் கதவை தட்டினார். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் நித்திய பிரியா தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சீனிவாசன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்தியபிரியா தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நித்திய பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நித்திய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி கோட்டாட்சியர் ஜெயராமனும், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண்ணை கழுத்து அறுத்து படுகொலை செய்த கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மூலக்கரையில் வசித்து வந்தவர் தேவி (வயது 55). இவரது கணவர் சுரேஷ். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சத்தியமங்கலம் வந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ் லாரி கிளீனராக உள்ளார். அடிக்கடி வெளியூர் போய் விடுவாராம்.

    இதற்கிடையே நேற்று வெகு நேரமாகியும் தேவியின் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்த போது திடுக்கிட்டனர். அங்கு தரையில் கழுத்து அறுப்பட்ட நிலையில் தேவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் வீட்டு முன் அந்த பகுதி மக்கள் திரண்டனர்.

    சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தப்படி வெளியே ஓடி வந்து நின்றது.

    மேலும் கைரேகை நிபுணரும் வரவழைக்கப்பட்டு கொலையாளியின் கை ரேகையை பதிவு செய்தார்.

    தேவி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஒரு தாலி (மஞ்சள்) கயிறும் மது பாட்டில்லும் கிடந்தது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட தேவிக்கு ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தான் தேவி கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் உறுதியாக தெரியவில்லை.

    தேவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசாமியே இந்த கொடூர கொலையில் ஈடுபட்டிருக்க கூடும் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த படுகொலை சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேவியை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆசாமி யார்? கள்ளக்காதலில் தான் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தலைமையில் ஒரு தனி போலீஸ் படையும் இதேபோல் பு.புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் இன்னொரு போலீஸ் படையும் என 2 தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்ட கொலையாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள். 

    கவுந்தப்பாடி அருகே 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள காசிலிங்க கவுண்டன் புதூரை சேர்ந்தவர் அபிமன்னன். இவரது மனைவி பெயர் ஜோதி (வயது 27).

    இவர்களுக்கு கோகிலா (9), மைதிலி (6) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த 16-ந் தேதி ஜோதி தனது கணவரிடம் குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து கொண்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார்.

    அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது கணவர் பல இடங்களில் தேடியும் ஜோதியை காணவில்லை.

    குழந்தைகளுடன் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்று விட்டார்களா? எனவும் தெரியவில்லை.

    இது குறித்து அபிமன்னன் கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்த குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் ஜோதியை தேடி வருகிறார்கள்.
    கவுந்தப்பாடி அடுத்துள்ள செந்தாம்பாளையத்தில் தனது காதலி என நினைத்து வேறொறு பெண்ணை கன்னத்தில் அறைந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு தோட்டத்து பாதையில் கவுந்தப்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் பைக்கில் வந்த வாலிபர் அந்த பெண்ணை தாக்கி கீழே தள்ளி கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே வாலிபர் பைக்கை எடுத்து கொண்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தாக்கிய வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெண்ணை தாக்கிய ஆப்பக்கூடல் கூத்தம் பூண்டியை சேர்ந்த அய்யாசாமி மகன் வல்லரசு (20) என்ற வாலிபரை கைது செய்தனர். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.

    வல்லரசு ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். தனது காதலி என நினைத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். கீழே தள்ளி கன்னத்தில் அறைந்த பெண் வேறு பெண் என்பதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    மேலும் போலீசார் விசாரணையில் ஒருதலையாக ஒருபெண்ணை காதலித்து வந்தார். அவர் ஊர் பெயர் தெரியாது. அந்த பெண் என நினைத்து இந்த பெண்ணை கன்னத்தில் அறைந்து விட்டேன் என தெரிவித்தார்.

    வல்லரசு மீது கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொடுமுடி அருகில் வெள்ளோட்டாம் பரப்பு பஸ் நிறுத்தம் அருகில் எதிரெதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
    கொடுமுடி:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை காந்தி புரம் கிழக்கு வீதியில் வசிக்கும் சவுந்தர்ராஜ் என்பவர் மகன் பிரபு (வயது 22) என்பவர் நேற்று மாலை கரூரை சேர்ந்த மண்மங்களம் பகுதியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 27) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்துள்ளார்.

    அப்போது எதிரே பைக்கில் வந்த பாசூர் பழனிக்கவுண்டன்புதூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் இளங்கோவன் (38) பிரபு வந்த பைக்கின் மீது மோதி இதில் கீழே விழுந்த மூவரில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிர் இழந்தார். மற்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவனும் உயிரிழந்தார். இறந்து போன பிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை இறந்து போன இளங்கோவனுக்கு கனகா (வயது 27) என்ற மனைவியும் பவித்ரா (வயது 5) அசுவிதா (வயது 4) என்ற இரண்டு பெண் குழந்தையும் உள்ளன. இது குறித்து தகவலறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் அப்துல் ரகீம் (வயது 19). இவர் சத்தியமங்கலம் பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பணி முடிந்ததும் கட்டிங் மிஷினை சுற்றி மடக்கி வைத்து கொண்டிருந்தார்.

    அந்த கட்டிங் மிஷினில் மின் வயர் தேய்ந்து மின் கம்பி வெளியே தெரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது கை தெரியாமல் படவே அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் ரகீமை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×