search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர் பூங்கா"

    • நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகராட்சி சார்பில் சுள்ளிமடை தோட்டம் பொன் காளியம்மன் நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
    • குமார பாளையம் நகராட்சி பகுதி யில் தார் சாலை, தண்ணீர் தொட்டி, பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகராட்சி சார்பில் சுள்ளிமடை தோட்டம் பொன் காளியம்மன் நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நகராட்சி கமிஷனர் சரவணன் தலைமையில் நடை பெற்றது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் என்ஜினீயர் ராஜேந்திரன், எஸ்.ஓ.ராமமூர்த்தி, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், தர்மராஜன், அழகேசன், கோவிந்தராஜன், ராஜ், சுமதி, கனகலட்சுமி, விஜயா உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் குமார பாளையம் நகராட்சி பகுதி யில் தார் சாலை, தண்ணீர் தொட்டி, பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அம்மன் நகர் முதல் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரை உள்ள பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவரும், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பா ளருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகர தெற்கு தி.மு.க. பொறுப்பாளர் ஞானசேகரன், கவுன்சி லர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைகளிடம் பேசினார்
    • காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் போலீஸ் குடியிருப்பில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் காவலர் குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது அவரை குழந்தைகள் பூங்கொந்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்வெட்டு திறந்துவைத்து ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைக ளிடம் பேசினார். அங்கு உள்ள செட்டில்கார்ட் மைதானத்தில் பயிற்சி எடுத்துவரும் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களிடம் கைகு லுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    தொடர்ந்து காவலர் குடியிருப்பை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு, அங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் காவலர் குடியி ருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்றவர், அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பெரியநாய க்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் காவலர்களின் குடும்பத்தி னர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது.
    • தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5வது வார்டுக்கு உட்பட்ட நியூ டவுன் பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிறுவர்கள், சிறுமியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும், கர்நா டகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மீது நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது 1,500 ஆண்டுகள் பழமையானசிவன் கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடவும் வசதியாக மாநகராட்சி சார்பில் கோவில் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இப்பூங்காவிலிருந்து ஓசூர் நகரப் பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்க வசதியாகக் கண்காணிப்பு கோபுரமும், பைனாகுலரும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி பூங்கா பாழ்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வெடுக்க இருக்கை வசதிகள் இல்லை.

    சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. மலை மீது இருந்த தடுப்பு சுவர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

    பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மீது நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இத்தருணங்களில் லேசாக கால் தவறினாலும் பள்ளத்தில் விழும் நிலையுள்ளது. மேலும், பூங்காவுக்கு குழந்தைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையுள்ளது.

    இதுதொடர்பாக ஓசூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில் ஓசூர் முதல் அத்திப்பள்ளி வரை உள்ள ஏராளமான தொழிற் சாலைகளில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.

    தொழிலாளர்கள் விடு முறை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க சந்திரசூடேஸ்வரர் கோவில் மற்றும் சிறுவர் பூங்காவுக்குவந்து செல்வது வழக்கம்.

    ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா பாழ்பட்டுள்ளது. எனவே, பூங்காவைச் சீரமைத்து, முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பூங்காவில் கூடுதலாக பொழுது போக்கு வசதிகளுடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் அடுத்த பூண்டியில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை அகற்றி 1944ல் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டி திறக்கப்பட்டது.

    இந்த நீர்த்தேக்க பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், பல்வேறு அணைக்கட்டு மாதிரிகள் இடம் பெற்ற நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வு மையம் ஆகியவையும் இங்குள்ளன.

    மேலும் நீர்த்தேக்கத்துக்கு நடுவில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு பூண்டி பஸ் நிலையம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த அணையில் நீர்வற்றும்போது பழமையான ஊன்றீஸ்வரர் கோவிலைக் காணலாம்.

    இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குவதால், நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து குழந்தைகள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. பரப்பளவு 121 சதுர கி.மீ ஆகும்.

    பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கொசஸ்தலை ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது.

    மேலும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் அணை நிரம்பினால் பேபி கால்வாய் மற்றும் பிரதான இணைப்பு கால்வாய் மூலம் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

    இங்குள்ள பூங்காவில் பெரியோர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு ஊஞ்சல்கள், அமரும் இருக்கைகள் போன்றவை இருந்தன. எனினும் இப்பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

    அதனால் இனி வருங்காலத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் சேதமடைந்த பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.

    இதுபோன்று செய்வதன் மூலம் வருங்காலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    பூண்டியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்காக இப்பகுதியைத் தோண்டியபோது கிடைத்த பழங்காலப் பொருள்களைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம். இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிக்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த அருங்காட்சியகத்தில் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழி போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பூண்டிக்கு அருகிலுள்ள கொசஸ்தலை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியிலும் அதையடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

    இதைக் கருத்தில்கொண்டு பூண்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் வகையில் தொல் பழங்கால அகழ்வைப்பகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அகழ்வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள் நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய ஈமப்பேழை கல்மரம், நிலவியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரிக்கரை மீது சேதமடைந்த பூங்காவை தரம் உயர்த்தும் வகையிலும், சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உபகரணங்கள், டைனோசர், செல்பி பாயிண்ட், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும் ரூ.80 லட்சம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்த்தேக்க வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் சத்தியமூர்த்தி திருவுருவச்சிலையுடன் அறிவியல் பூங்கா சிறுவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வந்தது.

    இங்கு சிறுவர்கள் பொழுது போக்கும் வகையில் அறிவியல் உபகரணங்கள், குடை ராட்டினம், ஏற்ற இறக்கம் மற்றும் சம விளையாட்டு, குதிரை சவாரி ராட்டினம், ஊஞ்சல் விளையாட்டு, பூங்கா நீருற்று, இருக்கைகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருந்தது.

    அதனால் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் இருந்தது. ஆனால், திறந்த வெளியில் இருந்ததால், போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் புகலிடமாகவே மாறியது. அதோடு, கால்நடைகளும் புகுந்து விடுவதால் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகள் சேதமடைந்தது.

    இந்த நிலையில் பூங்காவை சீரமைத்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு அறிவியல் பூங்காவை நவீன முறையில் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.80 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற் கொண்டனர். ஆனால் இதுவரை அறிவியல் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    தற்போது இந்த அறிவியல் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சேதமடைந்த நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சீரமைக்கப்படும். அதேபோல், நவீன முறையில் குழந்தைகள் அறிவுபூர்வமாக கற்றதை நேரடியாக செயல் விளக்கம் மூலம் பெறும் நியூட்டன் இயக்க விதி போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் டைனோசர், பூங்காவிற்கு வந்து செல்வோர் நினைவாக சுயபடம் எடுத்துக் கொள்ளும் வகையில் செல்பி பாயின்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் பூண்டி நீர்த் தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான பணிகளை மேம்படுத்தினால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சி பொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர்பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவி ல்நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் 1 லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமேல்நிலைத் தொட்டியிலிருந்து சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில்மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூ ங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பா ளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர்குமரேசன்,வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சி பொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 4700 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர்பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில்நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது :- வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் 1 லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமேல்நிலைத் தொட்டியிலிருந்து சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

    முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில்மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன் என்றார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர்குமரேசன்,வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சிபொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது.

    குனியமுத்தூர்

    கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோட்டில் உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது.

    தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு செல்வது வழக்கம். மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நடைப்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதுதவிர மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

    இந்த நிலையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பது அங்கு வரும் பொது மக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள் காய்ந்து சருகுகளாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சுந்தராபுரம் பகுதியை பொறுத்தவரை பொழுது போக்குவதற்கு என்று குறிப்பிட்ட இடம் கிடையாது. இந்த ஒரு பூங்கா மட்டுமே உள்ளது. ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியிலாக காட்சியளிக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பைகளை அகற்றுகின்றனர்.குப்பைகள் தேங்கும் காரணத்தால் பூங்காவிற்குள் கொசு 

    • பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.

    ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீரமைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
    • ஊஞ்சல் விளையாட்டு தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலை களால் சூழப்பட்டுள்ளது. அத்தனாவூர் பகுதியில் படகு இல்லம், இயற்கைபூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை, நிலாவூர் ஏரி, ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இம்மலையில் அமைந்துள்ளன.

    இதனால் பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், குடும்பத்தோடும், நண்பர்களுடனும், அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் முக்கிய சுற்றுலா திடல்களில் ஒன்றான புங்கானூர் ஏரியான படகு இல்லம் ஆகும்.

    இந்த ஏரி 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ளது. இதன் பக்கத்தில் நிழற்குடம் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்ப ட்டுள்ளது. மேலும் ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறுவர்களுக்கு ரூபாய் 5 நுழைவுக் கட்டணமும், பெரியவர்களுக்கு ரூபாய் 15 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் ஊஞ்சல் விளையாட்டு தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

    குழந்தைகள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படா தவாறு விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் எனக் குழந்தை களின் பெற்றோர்கள், சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×