search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amruth 2.0 Project"

    • நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகராட்சி சார்பில் சுள்ளிமடை தோட்டம் பொன் காளியம்மன் நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
    • குமார பாளையம் நகராட்சி பகுதி யில் தார் சாலை, தண்ணீர் தொட்டி, பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகராட்சி சார்பில் சுள்ளிமடை தோட்டம் பொன் காளியம்மன் நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நகராட்சி கமிஷனர் சரவணன் தலைமையில் நடை பெற்றது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் என்ஜினீயர் ராஜேந்திரன், எஸ்.ஓ.ராமமூர்த்தி, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், தர்மராஜன், அழகேசன், கோவிந்தராஜன், ராஜ், சுமதி, கனகலட்சுமி, விஜயா உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் குமார பாளையம் நகராட்சி பகுதி யில் தார் சாலை, தண்ணீர் தொட்டி, பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அம்மன் நகர் முதல் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரை உள்ள பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவரும், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பா ளருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகர தெற்கு தி.மு.க. பொறுப்பாளர் ஞானசேகரன், கவுன்சி லர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×