search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்கு மாவட்ட காங். தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
    X
    தெற்கு மாவட்ட காங். தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

    கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சூரம்பட்டி:

    கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாநகர மாவட்ட காங் கிரஸ் கட்சி சார்பில் சூரம்பட்டி சரகத்துக்கு உட்பட்ட காளைமாடு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலைவகித்தார் .

    இதில் முன்னாள் துணை மேயர் பாபு, மண்டல தலைவர் திருச்செல்வம்,அயுப்அலி, விவசாய பிரிவு பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் சித்ரா விஸ்வநாதன், மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, சின்னசாமி கண்ணப்பன் முகமது அர்சத், விஜய் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    இதேபோன்று தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையம், எல்.ஐ.சி நகரில் கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆர். எம்.பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செங்குளம் பழனிச்சாமி, வட்டார தலைவர்கள் முத்துகுமார், கோபாலகிருஷ்ணன் ,ராவுத்குமார், முத்துசாமி, சர்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவர் தளபதி ரமேஷ், மகளிர் காங்கிரஸ் கலா, சிவகுமார், மாணவரணி காங்கிரஸ் பயாஸ், இளைஞரணி காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபு , அரிப் அலி, துணைத் தலைவர்கள் வாசுதேவன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். 

    Next Story
    ×