search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி பெண்"

    • கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை
    • செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    கன்னியாகுமரி மாவட் டம் சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவ ருக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சீதா (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஓரு மகள் உள்ளனர்.

    முதுகலை பட்டப்படிப்பு படித்து விட்டு ஆசரியர் படிப்பும் படித்துள்ள சீதா, குலசேகரன் புதூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் தனது 2 குழந்தைகளையும் செங்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.

    கணவருடன் வசித்த சீதா தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். கடந்த 29-ந் தேதி அவர் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் மாலையில் சீதா வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கணவர் கிருஷ்ணன் தேடி னார். ஆனால் எந்த தகவ லும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசில், கிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான சீதாவை தேடி வருகின்றனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்காக 2 தனிப்படை களும் அமைக்கப்பட்டன. அவர்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்கு சீதா சென்றிருக்கலாமா? என விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்தது. சீதா கடத்தப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகன பயணம் நடத்த முடிவு
    • பல்வேறு மாநிலங்கள் வழியாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி காஷ்மீர் சென்றடைகிறார்.

    கன்னியாகுமரி :

    கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கிருஷ்ணாபுரதொட்டி பகுதியை சேர்ந்தவர் சித்ரா ராவ் (வயது 24). இவர் நடன கலைஞர் ஆவார். எம்.பி.ஏ.பெண் பட்டதாரியான இவர் பெற்றோர்களை கைவிடக்கூடாது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகன பயணம் நடத்த முடிவு செய்து இருந்தார்.

    அதன்படி அவரது இருசக்கர வாகன பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட நேருயுவ கேந்திரா கணக்கு மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் ரெங்கநாதன், மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்ட சித்ராராவ் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்லும்போது அவரது தாயாரான கவிதா, அவரை கட்டித்தழுவி வழி அனுப்பி வைத்தார். இவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி காஷ்மீர் சென்றடைகிறார்.

    மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 590 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து செல்கிறார். அதன்பிறகு மீண்டும் காஷ்மீரில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து பெங்களூரில் தனது இருசக்கர வாகன பயணத்தை நிறைவு செய்கிறார்.

    • சென்னையில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு படித்து வந்தார்.
    • அங்கு வந்த கருப்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வட்டக் காடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம், விவசாயி. இவரது மகள் திரிஷா (21), பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ள இவர் சென்னையில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் குளிக்க சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை தட்டி பார்த்த போது நீண்ட நேரமாகியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதற்கிடையே அங்கு வந்த கருப்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே திரிஷா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றையும் மீட்டு போலீசார் ஆய்வு நடத்தி விசாரித்து வருகிறார்கள். விசாரணை முடிவில் அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி (வயது 43) இவருடைய கணவர் செந்தில்குமார் இவர்களுக்கு மகன் மற்றும் சௌமியா என்ற மகள் உள்ளார். சௌமியா ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் செல்வராணி, மற்றும் இவரது மகனும் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுள்ளனர். வீட்டில் சௌமியா மட்டும் தனியாக இருந்துள்ளார் பின்னர் வேலையை முடித்துவிட்டு செல்வராணியும் அவரது மகனும் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது சௌமியா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கம் மற்றும் தெரிந்த இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்காததால் நேற்று கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் செல்வராணி தனது மகள் சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கீழ்குப்பம் போலீசார் வழக்கை பதிவு செய்து மாயமான சௌமியாவை தேடி வருகின்றனர்.

    • இரவு ஷீலா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது நிது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்
    • அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே ராஜாக்கமங்கலம் துறை அந்தோணியார் குருசடிதெரு பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் (வயது52) மீனவர். இவரது மனைவி ஷீலா.இவர்களுக்கு ஒரு மகனும் நிது (22) என்ற மகளும் உள்ளார். நிது பட்டப்படிப்பு படித்துள்ளார். நேற்று மிக்கேல் கடல் தொழிலுக்கு சென்று இருந்தார்.ஷீலா மற்றும் அவரது மகனும் வேலைக்கு சென்று இருந்தனர்.வீட்டில் நிது மட்டும் இருந்தார்.

    இரவு ஷீலா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது நிது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷீலா கூச்சலிட்டார்.அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிதுவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.பின்னர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிது பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.
    • அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (54). இவரது இளைய மகள் கவுரி (30). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் அனுமன் பள்ளியில் உள்ள தனியார் சித்த மருத்துவ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கவுரிக்கு கடந்த சில வருடங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று காலை தாய் தனலட்சுமி வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கவுரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவர் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்து ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டரிடம் பட்டதாரி பெண் மனு கொடுத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த பட்டதாரி பெண் லுத்துபியா பேகம். இவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கும், கீழக்கரை முகம்மது அப்துல் காதர் மரைக்கா (வயது50) என்ப வருக்கும் 2002-ம் ஆண்டு திருமணமானது. எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். திருமணத்தின்போது எனது தந்தை வரதட்சணையாக கொடுத்த வீட்டில் 20 வருடங்களாக கணவர் மற்றும் பிள்ளைகள் வசித்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக எனது கணவரின் நடத்தை மற்றும் அணுகுமுறையில் பல மாற்றங்கள் காணப்பட்டது.

    திருமணத்தின் போது எனது தந்தை 41 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். அதனை எனது கணவர் விற்றும், அடகு வைத்தும் ஊதாரித்தனமாக செலவு செய்தார். மேலும் எனது குடும்பத்தார் கொடுத்த ரூ.10 லட்சத்தையும் அபகரித்து விட்டார்.

    என்னை ஏமாற்றி எனக்கு சொந்தமான சொத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். எங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து என்னிடம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

    • பண்ருட்டியில் பட்டதாரி இளம்பெண் மாயமானார்.
    • படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர், வடலூரி ல் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 26-ந் தேதி இரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவர் காணாமல் போய்விட்டார்.

    அவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சேலத்தில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாபேட்டை வீராணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 29). பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவருடன் கோபித்துக்கொண்டு மனோன்மணி கடந்த ஜனவரி மாதம் முதல் பொன்னம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் மனோன்மணி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மனோன்மணி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அரவிந்திடம், மனோன்மணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் ? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலனுடன் போலீசில் தஞ்சம்
    • பெற்றோரின் பாசப்போராட்டம் தோல்வி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வணிகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமாரி (வயது 20), பட்டதாரி.

    இவருக்கு வருகிற 29-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தி ருந்தனர். இதையடுத்து திருமணம் அழைப்பி தழ் கள் தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டிலிருந்த செல்வகுமாரி திடீரென மாயமானார்.மகள் மாயமானது குறித்து அவரது தாயார் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வக்குமா ரியை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்வ குமாரி தனது காதலன் கார்த்திக் (24) என்பவர் உடன் கோட்டார் போலீசில் தஞ்ச மடைந்தார்.

    தாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்து காத லித்து வந்தோம். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்தனர். எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிற 29-ந்தேதி திருமணம் நடத்தவும் ஏற்பாடு செய்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீ சார் கார்த்திக் மற்றும் செல்வகுமாரியின் பெற் றோருக்கு தகவல் தெரி வித்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது செல்வ குமாரியை பெற்றோர் தங்க ளுடன் வருமாறு அழைத் தனர். ஆனால் செல்வ குமாரி மறுப்பு தெரிவித்தார்.

    காதலன் கார்த்திக்குடன் தான் செல்வேன் என்றும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். பெற்றோர் பலமுறை அழைத்தும் அவர் செல்ல மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆனால் கார்த்திக்கின் பெற்றோர் செல்வக்குமா ரியை ஏற்றுக் கொண்டனர்.இதையடுத்து காதல் ஜோ டியை போலீசார் வாழ்த்தி கார்த்திக்குடன் அனுப்பி வைத்தனர்.

    • கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை
    • வருகிற 31-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மணலிக்கரை புத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் உயில்சன். கட்டிட தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உண்டு. மூத்த மகள் பியுட்லின் ஜின்ஷா (வயது 23) இளங்கலை பட்டதாரி யான இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற 31-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

    இந்நிலையில் 19-ந்தேதி இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பியுட்லின் ஜின்ஷா அதிகாலையில் மாயமாகி விட்டார். தாய் தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பியுட்லின் ஜின்ஷா குறித்த எந்த வித தகவலும் கிடைக்க வில்லை.

    சம்பவம் குறித்து உயில்சன் கொற்றிக்கோடு போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை நடத்திய நிலையில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    திருமணம் நடக்க 11 நாட்கள் இருந்த நிலையில் பியுட்லின் ஜின்ஷா கடத்தப்பட்டாரா இல்லை காதலனுடன் ஓடி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உறவினர் கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    கோவையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    கவுண்டம்பாளையம்:

    சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் வித்யா (30). எம்.ஏ. பட்டதாரி. இவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இது குறித்து வித்யா சென்னை பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மணிகண்டன் கோவை சங்கனூர் வந்து விட்டார். இங்கு பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் வித்யா சென்னையில் இருந்து கோவை வந்தார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகன்யா, பாக்கியலட்சுமி ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். மணிகண்டனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    அவர் தன் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாகவும், விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாலும் வித்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்தார்.பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற வித்யா தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கெஞ்சினார். ஆனால் மணிகண்டன் மனம் இறங்கவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திடீரென மேட்டுப்பாளையம் சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரை மகளிர் போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.நள்ளிரவு 1 மணி வரை வித்யா தனது போராட்டத்தை தொடர்ந்தார். பின்னர் தர்ணாவை கைவிட்டு கோவையில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்றார். #tamilnews
    ×