பட்டதாரி பெண் தூக்குபோட்டு தற்கொலை

தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பட்டதாரி பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (54). இவரது இளைய மகள் கவுரி (30). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் அனுமன் பள்ளியில் உள்ள தனியார் சித்த மருத்துவ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கவுரிக்கு கடந்த சில வருடங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று காலை தாய் தனலட்சுமி வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கவுரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com